பக்கம்:மூன்றாம் குலோத்துங்க சோழன்.djvu/109

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

104 மூன்றாம் குலோத்துங்க சோழன் வீரனான சோழ சூரியனும் இப்போது அஸ்தமித்தான். இவன் மறைந்தபின் இராசராசனும் அவன் பின்னோரு மாகிய அரசரின் ஆளுகை, சூரியாஸ்தமனத்துக்குப் பின் எழும் அந்திமாலையின் அரசாட்சியாகவே முடிந்தது. ஆயினும், அம் மாலையின் மயக்கத்தைப் போக்கக்கூடிய பூர்ணசந்திரனது உதயவொளி தெற்கிலிருந்து மாறி, வடக்கே கண்ணுக்குப் புலப்படலாயிற்று. அதுவே விஜய நகர சாம்ராஜ்யம்.