பக்கம்:மூன்றாம் குலோத்துங்க சோழன்.djvu/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

16 | மூன்றாம் குலோத்துங்க சோழன் தையும் பலவகைகளில் அழகுற அமைத்ததும் சிறந்தவை. இவன், மற்றைத் தமிழரசர்களை அடக்கித் தன் ஒரு குடைக்கீழ் இத்தமிழகத்தை ஆண்டதோடு, வடநாடுகளிலும் படையெடுத்துச் சென்று, வச்சிரம் அவந்தி மகதம் இத்தேசத்து மன்னர்களை வென்று, இமயத்தில் தன் புலிக்கொடியை நாட்டி வந்தான். இவனைப் பாடிய புலவர்கள் பலர். இவன் அருமை பெருமைகளைப் பட்டினப்பாலை, பொருநராற்றுப்படை என்னும் பாட்டுக்களிலும், பிற சங்கச் செய்யுட் களிலும் விரிவாகக் காணலாம். இவனுக்குப் பின்பு ஆண்ட சோழர்கள், பதின்று வருக்கு மேற்பட்டோர் சங்க நூல்களால் அறியப்படுகின் றனர். அவருள் கிள்ளிவளவன், பெருநற்கிள்ளி என்னும் இருவரைப்பற்றிய செய்திகள் சிலவற்றை மணிமேகலை யிலும் சிலப்பதிகாரத்திலும் காணலாம். சோழரெல் லாரும் அறிவு ஆற்றல்களாலும் வள்ளன்மையாலும் மேம்பட்டு விளங்கியவர்கள் என்பது அவர்களைப் பண்டைப் புலவர்கள் பாடிய சங்கச் செய்யுட்களினால் அறியப்படுகின்றது. இவ்வேந்தருள் கடைசியில் ஆண்ட சோழன் கோச் செங்கணானாக இருக்கலாம் என்று தோன்றுகிறது. இவன் முற்பிறவியில் சிலந்தியாயிருந்து திருவானைக் காவில் எழுந்தருளியுள்ள சிவபிரானுக்கு வெயில் விழாமல் நூற்பந்தர் இழைத்துப் புரிந்த திருத்தொண்டால், மறு பிறவியில் பேரரசன் ஆனான் என்று தேவாரம் முதலிய வற்றில் புகழ்ந்து பாடப்பட்டுள்ளான். இவன், சிவபக்தி யின் மிகுதியால் 'எண்தோள் ஈசற்கு எழின் மாடம் எழுபது செய்த 'வன் ; அறுபத்து மூன்று நாயன்மார்க ளுள் ஒருவராக மதிக்கப்பட்டு விளங்கினவன். திருநறை யூரில் எழுந்தருளியுள்ள திருமாலிடமும் இவன் பக்தி