பக்கம்:மூன்றாம் குலோத்துங்க சோழன்.djvu/141

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

MA புத்திரனில்லை என்று புகழுடைய ராஜரப்போ சந்தானமில்லை என்று தாபம் மிகவடைந்தார் நாரதரங்கு மப்போ நலமாய் எழுந்தருள கண்டுமந்த ராஜாவும் கைகூப்பியே பணிந்து மைந்தரில்லாக் குறையைச் சொல்லி மனந்தளர்ந்தார் கேட்டு மந்த நாரதரும் கிருபையுடனே எது சொல்வார் சாவித்திரி தேவியை நீர் சிந்தை தன்னிலே நினைந்து ஓமங்கள் செய்து மிக நேமத்துடனிருந்தால் (அந்த) தேவி கிருபையால் ஜயமுண்டு என்று சொல்லி அக்கினியில் ஓமங்கள் பண்ணிவைத்தார் நாரதரும் அந்தணர்க்கும் தேவர்கட்கும் அவிர்ப்பாகமுங்கொடுத்து வந்தனங்கள் செய்து மகாரஜர் வீற்றிருந்தார் அக்கினி குண்டத்தின் நடுவிலொரு தேவிவந்தாள் அறிவீரோ பண்டவர்காள் அவளுடைய ரூபத்தை அதிகாலை தன்னில் பிரம்மமாய்த் தானிருப்பாள் மத்தியான்ன காலத்தில் ஜகத் ஜோதியாயிருப்பாள் சந்தியா காலத்தில் சந்திரகாந்த பட்டுடுத்தி அனுஷ்டானஞ் செய்திருக்கும் அன்புடைய பக்தர்களின் மகத்துக்கள் தங்களுட மனதில் விளங்கிடுவாள் இப்படிப்பட்ட ஏற்றமுள்ள தேவியப்போ மூர்த்தீகரித்து அரசன் முன்னே விளங்கிநின்றாள் கண்டுமந்த ராஜாவும் கையை உயரவெடுத்து பக்தியுடன் துதித்துப் பாதங்களில் வணங்கி (அம்மா) நீர் ஆத்மஸ்வரூபமோ அற்புத விக்ர ஹமோ பிரம்மஸ்வரூபமோ பேதமற்ற வஸ்துவோ திக்குப்பாலர்களோ திருமூர்த்தி நீர் தாமோ நீர்யாரோ எனக்கு அறிய உரையுமென்றார் கேட்டுமந்த சாவித்திரி, கிருபையுடனே ஏதுரைப்பள் நான்முகனார் அனுப்ப நானும் வந்தேன் ராஜாவே நான்முகர் சொன்னபடி நானுமிப்போ சொல்லுகிறேன்