பக்கம்:மூன்றாம் குலோத்துங்க சோழன்.djvu/143

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

முத்திழைத்த கோவிலுக்கு மூப்பி என்னும் தாஸியவள் பட்டு மடிப்பின்மேல் பாலகியைக் கொண்டுவந்து அச்வபதி ராஜா அடிமடியில் வைத்திடவே (ராஜா) உச்சி முகந்து உள்ளங்கால் கண்ணிலொற்றி பொன்னுரைத்து நாவிலிட்டார் புத்திரிக்கு அப்பொழுது ஜாதகர்மம் நாமகர்மம் செய்து மந்த ராஜாவும் கடுந்தவஸால் வந்திட்ட கட்டழகி தேவியரை சாவித்திரி யம்மனென்று சந்தோஷமாயழைத்தார் மாதாமனமகிழ வளர்ந்தாளே மங்கைநல்லாள் தாயார்மகிழத் தவிழ்ந்து விளையாடினாள் தத்தடியிட்டு நடந்தாளே தையலரும் சித்தாடை கட்டித் தெருவில் விளையாடி வந்தாள் சுக்லபக்ஷச் சந்திரன் போல் சுந்தரியும் தான் வளர்ந்தாள் மகாலக்ஷ்மியைப்போல வடிவழகாய் இருந்தாள் இவளுடைய ரூபத்தைக் கண்டனந்தம் ராஜாக்கள் (நமக்கு) கிட்டாது என்றெண்ணிக்கேட்காதிருந்தார்கள் மாதா பிதாவும் அம்மன் வடிவழகைக் கண்டு கந்து (இவள்) அழகுக்கிசைந்த பர்த்தா யாரை வரித்திடுவோம் என்று எண்ணிராஜாவும் ஏக்கம் பெரிதாக சாவித்திரியம்மனுடன் தானே தெடுத்துரைப்பார் (இந்த) உலகமெல்லாந் திரிந்தேன் உன்னழகிற்கேற்றபர்த்தா காணோமே எங்கும் என் கன்னிகையே நீயுமிப்போ சதுரங்க சேனையுடன் தோழிமாரோடும் சென்று (நீ) தானே வரித்துவா தார்குழலே என்று சொன்னார் ஏது பிதாவே இப்படியும் சொல்வீரோ ஏற்குமோ தர்மமிது எங்கேயானாலுமுண்டோ தந்தையன்றோ கன்னிகையைத் தானம் கொடுத்திடுவர் தந்தையரும் இல்லாட்டால் சகோதரரும் செய்திடுவாள் சகோதாரும் இல்லாட்டால் தாயார் நடத்திவைப்பாள் தாயாருமில்லாட்டால் தானே வரித்திடுவாள்