பக்கம்:மூன்றாம் குலோத்துங்க சோழன்.djvu/146

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

சத்தியவானுக்குத் தானங் கொடுங்களென்றார் என்று சொல்லி நாரதரும் யதாஸ்தானம் போயடைந்தார். சாவித்திரியம்மன் திருக்கல்யாணம் சாவித்திரியம்மனுடன் தாயாரும் தோழிகளும் பட்டமகிஷியரும் பல்லக்கில் ஏறி வந்தாள் சதுரங்க சேனையுடன் தானுமந்த ராஜாவும் தேரின் மேலேறி வந்தார் தீரமுள்ள அச்வபதி பொன்னுடனே பூஷணமும் பெட்டகத்திற் றானெடுத்து பலவிதமாம் பண்டங்கள் கொண்டுவந்தார் வண்டிகளில் யானை குதிரைகள் மேற் கொண்டுவந்தாரங்கமணி தானை வெள்ளஞ் சேனையுடன் தானும் வந்தார் அச்வபதி நாகஸரமுழங்க நான்கு வகைசேனையுடன் வந்தாரே அச்வபதி வளமான காடுதன்னில் இரண்டு கண்ணுமில்லாத யவசேன ராஜரங்கே காட்டிலிருந்து கடுந்தபஸுபண்ணுகிறார் அச்வபதி ராஜா அவருடைய கிட்டவந்து ஆலிங்கனம் செய்து அதிக சந்தோஷமுடன் யவசேன ராஜருடன் ஏகாசனத்திருந்தரர் இஷ்டரைக்கண்டு யவசேனர் தான் மகிழ்ந்து வந்தீரோ அச்வபதி வளமான காடு தன்னில் காரணங்களுண்டோ உரையீர் கடுகவென்றார் காரணங்கள் சொல்லுகிறேன் கற்பகமே நீர்கேளும் (உம்) அம்ருத குமாரனுக்கு (என்) அழகுடைய கன்னி கன்னிகாதானம் தருவேன் நான் என்றுரைத்தார் (கையை அப்போ யவசேனர் அதிக சந்தோஷமுடன் உமக்கும் நமக்குமிது உத்தம சம் பந்தம் எப்போது கூடுமென்று இருந்தேனே ராஜாவே