________________
10 (நான்) ராஜ்யப் பிரஷ்டனாய் நாடு விட்டுக் காட்டில் வந்து காட்டினில் வந்தோம் கண்கள் தெரியவில்லை காய் கிழங்குதான் புஜித்து கடுந்தபஸு பண்ணுகிறோம் (இந்த) அருந்தபஸு செய்ய அறிவாளோ ஆரணங்கு யவசேனர் தானுரைக்க ஏற்றமுள்ள அச்வபதி அருந்தபஸு செய்யுமுங்கட் காதரவாய்த் தானிருப்பாள் கலங்காதிருமென்று கலியாணம் நிச்சயித்து காடு திருத்திப் பவழக்கால் தான் நிறுத்தி மேலே மறைப்பதற்கு மேற்கட்டுக் கட்டியவாள் மேல் கட்டுக் கட்டி விடுதிப்பூக்கள் தொடுத்து தோரணங்கள் கட்டி சுந்தரமாம் பந்தலிலே தூண்களுக்கிடையிலே தூண்டா விளக்கேத்தி அச்வபதிராஜாவின் ஆக்கினையுந்தப்பாதே கலியாண மண்டபமும் காக்ஷியுடனே அமைத்தாள் அச்வபதிராஜாவின் அலங்காரக் கன்னிகையை சந்தனாதித் தைலமிட்டு தாதியர் நீராட்டிவைத்தார் பச்சைமஞ்சள் பூசி பைங்கிளிக்கு நீராட்டி அற்புதமாம் சுந்தரிக்கு அலங்காரஞ் செய்தார்கள் (டாள் பரந்ததொரு நெற்றியிலே பொட்டு மிட்டாள் மையுமிட் கொத்ஸுவைத்துப் பின்னி குழல்வாரிப் பூமுடித்து குப்பியிற் பன்னீரும் குளிர்ந்திருக்கும் சந்தணமும் சிற்றிடையாள் சாவித்திரி தேகத்திற்பூசிவிட்டாள் வசிஷ்டரிஷியுடனே வாமதேவர் காசிபரும் வனத்திலேயுள்ள மற்றும் ரிஷிகளுடன் முற்றின தேங்காய் முந்நூறு கொண்டுவந்து விக்கின வினாயகருக்கு வேண்டித் தேங்காயுடைத்து மைகுழலாள் சாவித்திரி மாதா பிதாவுடனே வீற்றிருந்தாள் மணையில் விருதங்கள் செய்யவென்றே வசிஷ்டமகரிஷியும் மந்திரங்கள் உச்சரிக்க பாலிகையுந்தான் தெளித்து பாலம்ருதந்தான் சொரிந்தாள்