பக்கம்:மூன்றாம் குலோத்துங்க சோழன்.djvu/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

14 மூன்றாம் குலோத்துங்க சோழன் அமைதி நிலவியது. இவன் தில்லைச் சிதம்பரத்துக்குப் பற்பல திருப்பணிகள் புரிந்தும், திருநாட்கள் கண்டும் அந்தகர்க்குச் சிறப்புண்டாக்கினான். ஒட்டக்கூத்தர் பெரும் புலவராய்ப் பிரபலம் பெற்றது இவன் காலத்தி லிருந்தேயாகும். இவன் இளமையில் தன் தந்தையின் ஏவலால் கலிங்கப் போரில் கலந்து வெற்றி பெற்று வந் ததைப்பற்றிப் பரணியொன்றும் இவர் பாடியிருப்ப தாகத் தெரிகிறது. இவன் தியாக சமுத்திரம் என நூல்களிலும் சாஸனங்களிலும் வழங்கப்படுகின்றான். இச்சோழனுக்குப் பின் இவன் மகன் இரண்டாம் குலோத்துங்கன் பட்டம் எய்தினான். இவன் பழுத்த சிவபக்தன். கவிச்சக்கரவர்த்தியான கூத்தர், இவனது இளமைக் காலத்தில் இவனுக்குத் தமிழாசிரியராய் இருந்ததோடு, இவன் பட்டம் எய்தியபின் ஆஸ்தான மகா கவியாகவும் விளங்கினார். இக்குலோத்துங்கன்மேல், பிள்ளைத்தமிழ் ஒன்றும் உலாப்பிரபந்தமொன்றும் இக் கூத்தர் பாடிச் சிறப்பித்தனர். சிவபக்தியின் மிகுதியால், இவ்வரசன் தில்லையுள் திருமால் திருக் கோயில் கொண்ட திருச்சித்திரகூடத்தை அழித்து, அக்கோயில் மூர்த்தியைக் கடலில் இடுவித்துத் தில்லை யம்பலத்தின் திருமுற்றத்தை இடம் பெருகச் செய்தான் என்பர். புலவர் திலகரான சேக்கிழாரைக் கொண்டு, நாயன்மார்கள் சரித்திரமான திருத்தொண்டர் புராணம் என்ற பெரிய புராணத்தைப் பாடுவித்தவன் இச் சோழனே. தில்லைச்சிற்றம்பலம் பேரம்பலங்களைப் பொன் வேய்ந்து, கூட கோபுரங்களால் அந்தகரை அலங்கரித்தனன் இவன். இவனுக்கு அகளங்கன், திரு நீற்றுச் சோழன், எதிரிலிப் பெருமாள், நல்ல பெருமாள் என்ற வேறு பெயர்களும் உண்டு.