பக்கம்:மூன்றாம் குலோத்துங்க சோழன்.djvu/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

15 இராஜாதிராஜன் இந்த இரண்டாங் குலோத்துங்கனுக்குப்பின், இவன் மகனான இராஜராஜன் என்பவன் உத்தேசம் கி. பி. 1144-ல் பட்டம் பெற்றான். இவன் ஆட்சி முழுவதும் சோழசாம்ராஜ்யத்தில் அமைதி குடிகொண் டிருந்தது. இவன் காலத்திலும் கூத்தர் மிக்க செல்வாக் குடன் விளங்கினார். இச்சோழன் மீதும் அவர் உலாப் பாடியுள்ளார். அவ் வுலாவை அரங்கேற்றும் போது, இவ்விராஜராஜன் அதன் கண்ணி ஒவ்வொன்றுக்கும் ஆயிரம் பொன் சொரிந்ததாகச் சங்கரசோழனுலா கூறுகின்றது. இந்நூலன்றி, தக்கயாகப் பரணி, ஈட்டி யெழுபது என்ற வேறு இரண்டு நூல்களும் இவன் காலத்தே அப்புலவர் பெருமானால் பாடப்பட்டன. அவ் விரண்டிலும் இவ் இராஜராஜ சோழனே சிறப்பிக்கப் பட்டுள்ளான். இவன் ஆட்சி உத்தேசம் 19 வருஷங்கள் வரை நடைபெற்றது. அத்தியாயம் 3 இராஜாதிராஜன் இரண்டாம் தௌகித்திர பரம்பரை மேற்கூறிய இரண்டாம் இராஜராஜ சோழன் கி.பி. 1163 வரை ஆண்டவன். இவ்வரசனுக்குப் புத்திர சந்தானம் இல்லை. நாளடைவில் இவன் உடல்நிலையும் குன்றிவந்தது. அதனால் தனக்குப் பின் அரசாளுதற் குரிய மக்களைப்பற்றிய சிந்தை இவனுக்கு அதிகமா யிற்று. தனக்கு முன் ஆட்சி புரிந்த சோழர் வழியில் தோன்றிய இராஜகுமாரர்கள் எங்கேனும் உளரா என்று விசாரித்தபோது, கங்கை கொண்ட சோழபுரத்தில் பிள்ளைகள் இருவர் இருப்பது தெரிய வந்தது. இவன்