பக்கம்:மூன்றாம் குலோத்துங்க சோழன்.djvu/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

இராஜாதிராஜன் துக்கு அழைத்துச் சென்று தக்க பாதுகாவலுடன் அங்கே அமர்வித்தார் ; அக்கம் பக்கங்களிற் பகைவர் சூழ்ச்சிகளால் கேடு நேராதபடியும், உடன் கூட்டம் முதலிய அதிகாரிகளால் அதிக்கிரமமொன்றும் நடவாத படியும் வேண்டிய முன்னேற்பாடுகளைச் செய்து, இரண் டாண்டுகள் வரையும் அரசியல் நிர்வாகத்தைத் தாமே மிக்க திறமையுடன் நடத்தி வந்தார். இறந்த அரசனால் இரண்டு வயதுக் குழந்தையான எதிரிலிப் பெருமாள் இளவரசனாக்கப்பட்டது முதலே அவன் பேரால் சாஸ னங்கள் வழங்கலாயின. ஆயினும் அவ்விளங்கோவிற்குப் பட்டாபிஷேகம் செய்து அரசனாக்கி விடுவதே உத்தம மென்று பல்லவராயர் தீர்மானித்து, இளவரசனான அவ் வெதிரிலிப் பெருமாளை, அவனது நாலாம் வயதில்அதாவது கி. பி. 1165-6ல் நாடறிய இராஜாதிராஜன் என்று அபிஷேகத் திருநாமம் சூட்டி மகுடாபிஷேகமும் செய்வித்தார். சோழ சாம்ராஜ்ய முழுதும் அரசனை யும் அமைச்சரையும் வாழ்த்தின. சிறுவனான அரச னுக்குப் பிரதிநிதியாயிருந்து அரசியற் பொறுப்பனைத் தையும் திறமையாகவும் ஒழுங்காகவும் பல்லவராயரே நடத்தி வந்தார். அவ் விளவரசன் பட்டம் பெற்ற நான்கு, ஐந்து வரு ஷங்களில், தென்னாட்டில் குலசேகர பாண்டியனுக்கு விரோதமாக, சிங்கள வேந்தன் ஏவலால் ஈழப்படைகள் பாண்டி நாட்டில் புகுந்தன. அங்கே அவற்றை எதிர்த்த பாண்டியன் சேனைகளையெல்லாம் போரில் முறியடித்து, கொள்ளை கொலைகளால் அவ்வீழப் படைகள் நாட்டைப் பாழ்படுத்தியதோடு, சோழநாட்டிலும் நுழையத் தொடங்கின. அப்போது குலசேகர பாண்டியன் சோணாட்டுக்கு ஓடி, அந்நாட்டரசனைத் தனக்கு உதவி புரியும்படி வேண்டினான். சோழவேந்தன் பிரதிநிதியான