பக்கம்:மூன்றாம் குலோத்துங்க சோழன்.djvu/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

24 மூன்றாம் குலோத்துங்க சோழன் செய்து சோணாடு மீண்டார். இப்போர் நிகழ்ச்சி, பெருமானம்பிப் பல்லவராயர் பாண்டிய நாட்டிற் பெற்ற வெற்றிக்கு 4,5 ஆண்டுகட்குப் பின் இராஜாதிராஜ னது 12-ம் ஆட்சியாண்டில் நடந்தேறியது. ஆகவே, சிங்களவருடன் இச்சோழன் படைகள் இருமுறை போராட நேர்ந்தது என்பது அறியலாகும். நான்கு வயதில் பட்டமெய்திய இவன் வாழ்க்கை 18-19 வயதோடு முற்றுப்பெற்றது. இவன் காலமுழுவ தும், உண்மையும் உறுதியும் வீரமுமுடைய மந்திரித் தலைவர்களால் இராஜ்ய நிர்வாகம் நடத்தப்பட்டு வந்த மையால், சோழ ஏகாதிபத்யம் பெரும்பாலும் முன்னிலை மையில் விளங்கியது. அத்தியாயம் 4 குலோத்துங்கன் ஆட்சித் தொடக்கம் மேலே கூறிய இராஜாதிராஜனுக்குப் பின் குலோத்துங்கன் மகுடஞ் சூடினான். இவன் முடிசூடிய காலம் கி.பி. 1178w ஜூலை 6உமுதல் 8உக்குள் என்று கணிக்கப்பட்டுள்ளது. இக்குலோத்துங்கன் தன் முன்னோனுக்கு என்ன முறையினன் என்பதைச் சாஸனங்கள் மூலம் அறிய இடமில்லை. ஆனால், இலக்கிய வழியால் ஆராயும்போது, இராஜாதிராஜனுக்கு இளைய சகோதரன் இவன் என்பதும், இராஜாதிராஜசோழன் தன் கடைசிக்காலத்தில் கங்கைகொண்ட சோழபுரத்தி லிருந்து தருவித்துத் தன் அரசுக்கு உரியவர்களாகத் தெரிந்தெடுத்த இரண்டு பிள்ளைகளுள் ஒரு வயதுடைய குழந்தையாயிருந்தவன் இவனே என்பதும் தெரிய வருகின்றன. அஃதாவது, விக்கிரம சோழனுடைய