________________
26 மூன்றாம் குலோத்துங்க சோழன் தென்னாட்டில் எப்பொழுதும் குழப்பத்தை உண்டாக்கிக் கொண்டே வந்தான். இது சோழ நாட்டையும் பாதிப் பதாயிருந்தது. அன்றியும் வடுகுநாடுகளிலும், கொங்கு தொண்டை நாடுகளிலும், சோழமுன்னோர்க்கு இருந்த ஆதிக்கம் சிலகாலமாக நெகிழ்ந்து வந்ததால், அங்கும் அவராணையைத் தாபிக்கவேண்டியது அவசியமாயிற்று. ஆக இவற்றையெல்லாம் ஒழுங்குபடுத்தி வைக்கும் பொறுப்பைத் தக்கவன் ஒருவன் ஏற்றாலன்றிச் சோழ சாம்ராஜ்யம் முன்னிலைமையை அடைய முடியாம லிருந்தது. அத்தியாயம் 5 போர்ச் செயல்கள் நம் சோழன் , அறிவாற்றல்களும் ஊக்கமும் உள்ள இளைஞனாயிருந்தமையால் தான் முடிசூடியதும், மேற் கூறிய கடமைகளைச் செய்து முடிக்கும் அவசியத்தை நன்குணரலானான். இவன் தமையனான இராஜாதி ராஜன் இளமையில் போர் முதலிய பெருங் காரியங்களைத் தானே சென்று நேரில் நடத்தியவனல்லன். மேதாவிக ளான அமைச்சர்களே பகைவர்களை ஒடுக்கியும் அவனது இராஜ்ய காரியங்களை நிர்வகித்தும் வந்தார்கள். ஆனால், இக்குலோத்துங்கன் அரசியல் முதலியவற்றுள் மேற் கூறியபடி நல்ல அனுபவம் பெற்றிருந்தமையால், இவன் முடிசூடியதும் அவையாவும் இவனுடைய பார்வையிலே நிகழலாயின. முதலில், ஆணைக்கடங்காதாரை அடக்கு தற்கு இவன் புரிந்த வீரச்செயல்களை நோக்குவோம்.