பக்கம்:மூன்றாம் குலோத்துங்க சோழன்.djvu/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

போர்ச் செயல்கள் கீர்த்தி கூறுகின்றது. இவ்வரலாறே பாண்டியருடன் நம் சோழன் நடத்திய இரண்டாம் போர் ஆகும். குலோத்துங்கனது சாஸனங்களில் முறையே, 'மதுரை கொண்டருளிய ' 'மதுரையும் பாண்டியன் முடித்தலையும் கொண்டருளிய' என இப்போர்கள் பிரித்துக் கூறப்பட்டுள்ளன. அதனால், இவை வெவ்வே றானவை என்பது தெளிவாகின்றது. பாண்டியனது முடித்தலை கொண்ட களமாதல் பற்றியே , மதுரைக்கு 'முடித்தலை கொண்ட சோழபுரம்' என்ற பெயரும் பின்பு வழங்கப்பெற்றது. இவ்வாறு மதுரையும் முடித் தலையுங் கொண்ட செயல்கள் குலோத்துங்கன் பட்டம் எய்திய இரண்டாண்டுக்குள் - அதாவது கி. பி. 1180-க் குள் நடந்ததாதல் வேண்டும். இது, இவனது 2-ஆம் ஆட்சியாண்டில் அமைந்த திருவக்கரைச் சாஸனம் முத லியவற்றால் தெரியவருகின்றது. இதனால், தன் 22-ஆம் வயதில் குலோத்துங்கன் இவ்வெற்றிகளைப் பெற்றவன் என்பது பெறப்படுகின்றது. (3) ஈழங் கொண்டது :- மேற்கூறிய பாண்டி நாட்டு வெற்றிகளுக்குப்பின் வீரகேரளன் என்பவன் குலோத்துங்கனுடன் பகைத்து எதிர்த்தான் என்றும், அப்போரில் கேரளன் தன் கைவிரல்கள் தறிக்கப்பட்டுத் தோற்றுச் சரணமடைந்தான் என்றும், அவனையும் அன்புடன் ஏற்றுத் தன்னுடனிருந்து உண்ணும்படி பரிகலத்து அமுதளித்து' உபசரித்தான் என்றும், மெய்க்கீர்த்திகள் கூறுகின்றன. இவ் வீரகேரளன் என்பவன் வேணாட்டரசன் என்று அறியப்படுகின்றான். இவன் கி. பி. 1126-7-ல் வாழ்ந்திருந்தவன் என்பது மலைநாட்டுச் சாஸனங்களால் அறியப்படுகின்றது. இடையில் நிகழ்ந்த இம்மலைநாட்டு வெற்றியை முன் காட்டிய சாஸனக் கட்டுரைத் தொடர்கள் குறிப்