பக்கம்:மூன்றாம் குலோத்துங்க சோழன்.djvu/4

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

முகவுரை படைப்புக்காலந்தொட்டுத் தமிழகத்தில் செங்கோ லோச்சி வந்த முடியுடை மூவேந்தர் வரலாறுகளை உள்ள படி அறியப் போதிய சான்றுகள் கிடைத்தில . ஆயி னும், சோழர் வரலாற்றை அறிதற்குப் பல சாதனங்கள் கிடைத்துள்ளன. இலக்கியங்களையும் கல்வெட்டுக்களையும் அடிப்படையாகக் கொண்டு ஆராய்ச்சியாளர்கள் இம் மன்னர்களைப்பற்றிப் பல நூல்கள் எழுதியிருக்கின்றனர். அவர்களுள் ஸ்ரீ க. அ. நீலகண்ட சாஸ்திரியார் ஆராய்ச்சி குறிப்பிடத்தக்கது. பிற்காலத்துச் சோழ அரசர்களுள் கீர்த்தி மிக்க மூன்றாங் குலோத்துங்கனைக் குறித்து, இது வரை வெளி வந்துள்ள வரலாறுகளையும், கல்வெட்டுக்களையும் இலக் கியங்களையும் ஆதாரமாகக்கொண்டு யான் சில ஆண்டு கட்கு முன்னர் மூன்றாம் குலோத்துங்க சோழன்' என்ற ஓர் ஆராய்ச்சி நூலை வெளியிட்டேன். அதனைக் கல்லூரி மாணவர்க்குப் பாடப் புத்தகமாகப் பல்கலைக் கழகத்தார் ஏற்படுத்தினர். தமிழ்நாட்டு வரலாற்று உணர்ச்சி மாணவர்க்கு ஏற்பட வேண்டுமென்ற விருப்பம் பெருகிவரும் இந் நாளில், உயர்நிலைப் பள்ளி மாணவர்க்கு ஏற்றவாறு, மூன்றாம் குலோத்துங்கன் வரலாற்றை ஆராய்ச்சிப் பகுதிகளை நீங்கி, எளிய முறையில் திருத்தியமைத்து இப்புதிய பதிப்பினை வெளியிடலானேன். இதனை மாணவர் வாசித்துப் பயன் பெறுவர் என்பது எனது அவா. வி. ரா. இராமசந்திர தீக்ஷிதர்