பக்கம்:மூன்றாம் குலோத்துங்க சோழன்.djvu/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

போர்ச் செயல்கள் 37 டுக்கு உண்டான கவலையும் துன்பங்களும் கணக்கில் அடங்கா. அவற்றை யெல்லாம் முடிவில் அரும்பாடு பட்டு ஒடுக்கிப் பாண்டிய நாட்டில் தான் செய்துவைத்த ஒழுங்கையெல்லாம் குலசேகர பாண்டியன் குலைக்கத் தொடங்கவே, குலோத்துங்கனுக்கு உண்டாகிய சீற்றத் துக்கு அளவில்லை. பாண்டிய அரசாட்சியையே அடி யோடு தொலைத்துச் சோழர் ஆதிக்கத்தில் அதை வைத்துவிடுவது என்று அவன் துணிந்தான் ; துணிந்து, தன் ஆற்றல் மிக்க படைகளை யெல்லாம் திரட்டிக் கொண்டு, பாண்டி நாட்டின் மேல் பாய்ந்தான். சோழன் சேனைகள் அதிவேகமாகத் தன்னாடு நோக்கி வருதலை அறிந்த குலசேகரன், பேர்பெற்ற தன் ஏழகப்படை மற்றப் படைகளைத் திரட்டிச் சென்று மட்டியூர், கழிக்கோட்டை என்ற இடங்களில் அச் சேனைகளை எதிர்த்து நின்றான். பெரும்போர் மூண்டது. வீராவேசத்துடன் பாண்டியன் சேனைகள் சோழ சேனை களைத் தாக்கின. ஆயினும் பல தலைமுறைகளாகப் பகைவருடன் பொருது பழகி, சோழ ஏகாதிபத்தி யத்தின் மேம்பாட்டுக்குக் காரணமாயிருந்த குலோத்துங் கனது மூலப்படைகளின் முன், அவை நிற்கும் வலியற் றுச் சிதறின. சோழ சேனைகள் அப் பாண்டியன் படை களை உழக்கித் துகைத்து அழித்துவிட்டன. அதனால், பாண்டியன் தன் குடும்பத்துடன் காட்டுக்குள் புகுந்து ஒளிக்க வேண்டியதாயிற்று. உடனே, சோழன் படை யாவும் மதுரைக்கோட்டையை வளைத்துக்கொண்டு, அங்கு நடந்த எதிர்ப்புக்களையும் கடந்து நகருக்குள்ளே புகுந்தன. புகுந்து, அரண்மனையுள் முடிசூட்டு மண்டபம் முதலியவற்றை இடித்துத் தகர்த்ததோடு, அவற்றைக்