பக்கம்:மூன்றாம் குலோத்துங்க சோழன்.djvu/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

கலை வளர்ச்சி 43 ஒட்டக்கூத்தரே என்று சில காலத்துக்கு முன்வரை கருதப்பட்டது. ஆனால், நூல் அச்சேறிவெளிவந்த பின், இதன் பாட்டுடைத்தலைவனான சோழன், நம் குலோத்துங்கனேயன்றி வேறெவனுமல்லன் என்பது தெளிவாயிற்று. இக்கோவையிலிருந்து, நம் சோழர் பெருமானது கலைவளர்ச்சித் திறம் நன்கு விளங்கு கின்றது. முத்தமிழ்த் துறையிலும் பிற கலைகளிலும் சிறு பருவத்திலிருந்தே நல்ல பயிற்சி பெற்றுத் தேர்ந் தவன் இவன் என்பது தெளிவாகின்றது. இதனை, " எண்ணெண்கலையே தெரியுங் குலோத்துங்க சோழன் (57) கலைவாரி (56) 'பலநூற் புலவோர்க்குத்தாபரன் ' ' (125) என்ற இக்கோவையடிகளால் அறியலாகும். இதற் கேற்பச் சிற்பக்கலையில் இவனுக்கிருந்த விருப்பம், திரிபுவனம் என்ற ஊரில் இவனால் கட்டப்பட்ட சிவாலயத்தின் மாதிரியிலிருந்து நன்கு தெரியக் கூடும். இராஜேந்திரசோழ ஆசாரியன் என்ற சிற்பி யொருவனுக்கு இவ்வரசன் நிலம் விட்டு ஆதரித்திருப் பது, தொழில் துறைகளில் இவனுக்கிருந்த அபிமானத் தைக் காட்டுகின்றது. நாட்டியக்கலை வளர்ச்சியிலும் இவனுக்குப் பெருவிருப்பம் உண்டு. திருவிடைமரு தூர்க்கோயிலில் ஆடுதற்காக நிருத்தம் வல்ல கூத்தர்களை இவன் அதிகப்படுத்தியதோடு, தன்னிடமிருந்த கூத் தன் ஒருவனை அக்கோயிலுக்கு அளித்திருப்பதினாலும், தன் ஆஸ்தானக் கூத்தனான குலோத்துங்க சோழ நிருத்தப் பேரரையன் என்பவனுக்கு வேண்டியன உதவி அபிமானித்திருப்பதனாலும், இவ்வாறே கலாவிநோத நிருத்தப்பேரரையன் என்பவனும் இவனால் சம்மானிக் கப்பட்டிருப்பதனாலும் இது விளங்குகின்றது. 1077-4