பக்கம்:மூன்றாம் குலோத்துங்க சோழன்.djvu/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

44 மூன்றாம் குலோத்துங்க சோழன் நம் சோழனுக்கு முன்பு மூன்று தலைமுறைகளாக ஆண்ட சோழர் ஆட்சிகளிலே, தமிழ் வளர்ச்சி செழித் தோங்கியது. செயங்கொண்டார், ஒட்டக்கூத்தர், புக மேந்தி, சேக்கிழார் முதலிய பெரும்புலவர்கள் அக்காலத் தில் விளங்கினர். சோழ அரசர்களும் தமிழை நன்கு கற்றும் ஆதரித்தும் வந்தார்கள். அத்தகைய பயிற்சி யும் ஆதரவும் நம் சோழனுக்கும் பரம்பரையுரிமையா கவே கிடைத்திருந்தன. இது பற்றியே தமிழ்க்கலையில் இவனுக்கிருந்த அபிமானத்தையும், அத்துறையை இவன் வளர்த்து வந்ததையும், இக்கோவையாசிரியர் எல்லாவற்றினும் அதிகமாகவே கூறிப் புகழ்கின்றார். இக் குலோத்துங்கனது பேரத்தாணியைத் தமிழ்வாணர் பலர் அலங்கரித்து வந்தார்கள். அப்புலவர் பெருமக்க ளால் இவன் வாடாப்புகழ்மாலைகள் பல சூடினான். தன் பால் வரும் புலவர்களிடம் பொதுநோக்கொழிந்து அவர் கள் புலமையையும் கவித்திறமையையும் அளந்து மதித்தே அவர்களை ஆதரித்து வந்தவன் இவன். பாவா ணர் மட்டுமின்றி, உரைவாணர்களும் இவன் அவையை அணுகி உரைத்திறத்தால் தங்கள் பெரும் புலமையைக் காட்டி வந்தனர். அவர் உரையையுஞ் சோதித்து மதிப்பிட்டவன் இவன். இவ்வாறு, நூலிலும் உரை யிலும் ஆராய்ச்சி மிக்கவனாய்த் தமிழருமை அறிந்தவ னாதலால், உண்மைப் புலவர்களே இவனவையில் விளங்கி ஆதரவு பெறலாயினர். 2. வீராந்தப் பல்லவராயர் இங்ஙனம் கோவையாசிரியர் கூறியபடி இவனது நாளோலக்கத்தைச் சிறப்பித்து வந்த பெரும் புலவர் களுள், நம் சோழனால் அபிமானிக்கப்பட்ட ஆஸ்தான