பக்கம்:மூன்றாம் குலோத்துங்க சோழன்.djvu/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

46 மூன்றாம் குலோத்துங்க சோழன் தென்று தெரியவில்லை. இவரால் பாடப்பெற்ற சங்கர சோழன் என்பவன் நம் குலோத்துங்கனுடைய இளைய சகோதரனாவான். இவன், இரண்டாம் இராஜராஜன் இறந்த சில வாண்டுகளுக்குப்பின் சங்கமராசனுக்குப் பிறந்தவன் என்றும், தன் தமையன் காலத்தில் சோணாட் டின் ஒரு பகுதிக்குப் பிரதிநிதியாய் ஆண்டு வந்தவ னென்றும் தோன்றுகின்றன. சங்கரனுடைய மூத்த சகோதரர்களாக இவர் குறித்த நல்லமனும் குமார மகீதரனும் முறையே இராஜாதிராஜனும் குலோத் துங்கனுமே யாவர். இவருள் பின்னவன், குமார குலோத்துங்கன் என்று சாஸனங்களிலும் வழங்கப் படுவன். இவனும் இவன் சகோதரர் இருவரும் சங்கமராஜன் என்பவனுடைய தவப்புதல்வர் என்று இவ்வுலாவாசிரியர் குறித்தபடியே, சங்கமராச குலோத்துங்கன் சங்கமராச வரோதயன் என்றும் 'சங்கரன் முன்னோன் குலோத்துங்கன்' என சங்கரராசனுக்குத் தமையனே இவன் என்றும் குலோத்துங்கன் கோவையாசிரியர் கூறுதல் நோக்கத் தக்கது. இவ்வாறு சங்கம ராசன் புதல்வராகத் தெரிந்த மூவரும், இரண்டாம் இராஜராஜனை அடுத்துச் சோணாட்டை ஆண்டவர்கள் என்ற விஷயம் இவருலாவினால் தெளியப்படும். இரண் டாம் இராஜராஜன், தன்மேற் கூத்தர் பாடிய உலாக்கண்ணி ஒவ்வொன்றற்கும் பொன்னாயிரஞ் சொரிந் தான் என்பதும், அவன் தந்தையான இரண்டாங் குலோத்துங்கன் உலாவோடு பிள்ளைத்தமிழொன்றாலும் அப் புலவராற் பாடப் பெற்றனன் என்பதும் இவ் வுலாவாசிரியர் வாக்கிலிருந்தே முதன் முதல் நமக்குத்