பக்கம்:மூன்றாம் குலோத்துங்க சோழன்.djvu/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

48 | மூன்றாம் குலோத்துங்க சோழன் தென்பது பின்பு தெளிவாக விளக்கப்படும். இவன் முன் னோனான விக்கிரம சோழன் தியாகசமுத்திரம் என்றும், இரண்டாம் இராஜராஜன் தியாகமேகம் என்றும் வழங் கப்பட்டனர். தெய்வக் கவியாகிய கம்பரால் பாடப்பெற்ற சிறப்புடைமை பற்றிப் போலும், "தமிழ்வாணர் தெய்வக் கவியாபரணன் என்றார் கோவையாசிரியரும். ' மும்மணிக்கோவை என்ற நூல் ஒன்று கம்பரால் இயற்றப்பட்ட தென்றும், அதனைச் சோழன் முன் அவர் அரங்கேற்றிய காலத் தில் அவர்க்குப் பகைவனாயிருந்த வாணியன் தாதன் என்பான், அந்நூலின் முதற்சீரில் குற்றங்கூறினான் என்றும் தமிழ் நாவலர் சரிதை கூறுகின்றது. இம் மும்மணிக்கோவை நம் சோழன் மேற் பாடப்பட்டதாக வேண்டும். இவற்றால் முதற் குலோத்துங்கனது அரச வையைச் சயங்கொண்டாரும், இரண்டாம் குலோத்துங் கனது நாளோலக்கத்தைக் கூத்தரும், மூன்றாம் குலோத் துங்கனது அத்தாணியைக் கம்பநாடரும் ஆக, கவிச் சக்கரவர்த்திகள் மூவர், புவிச்சக்கரவர்த்திகளான குலோத்துங்கர் மூவர்களின் பேரவைகளை அலங்கரித்து வந்தார்கள் என்பது, சரித்திரங்களினின்று நாம் தெளிய லாம். கம்பநாடரது காலம்பற்றி வெவ்வேறு வகையான கருத்துக்கள் கூறப்படுகின்றன. ஆயினும், பலவாண்டு களுக்கு முன்பே, அவ்விஷயமாக, மகாவித்வான் ரா. இராகவையங்கார் அவர்கள் செந்தமிழ் 3-ஆம் தொகுதி 6-ஆம் பகுதியில் ஆராய்ச்சி நிரம்பிய கட்டுரை ஒன்று எழுதியுள்ளார். புலவர் பெருமானான கம்பரை 9-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவராகக் கொள்வதற்கு ஆதாரமே இல்லை யென்பதும், ஒட்டக்கூத்தரை