பக்கம்:மூன்றாம் குலோத்துங்க சோழன்.djvu/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

கலை வளர்ச்சி இவர்க்கு முழு விரோதியாக்கி வழங்குங் கதைக ளெல்லாம் வெறுங் கற்பனைகளே என்பதும், இவர்க்குப் பகைவனாயிருந்த புலவன் வாணியன் தாதன் என்பான் என்பதும், கூத்தர்க்கு 35, 40-வருஷங்களுக்குப் பின்பே கம்பர் பிரசித்தரானவர் என்பதும் இராமாயணத்தை இவர் பாடிய காலம் கி. பி. 1178-1185-க்குள் ஆக வேண்டும் என்பதும் ஓரங்கல் (Warrangal) ராஜ் யத்தைத் தன்னாற்றலால் ஓங்கச்செய்த முதற் பிரதா பருத்திரனிடம் (கி. பி. 1162-1197) இப்புலவர் சென்று அவனை வசப்படுத்தி அவனால் பெரிதும் அபிமானிக்கப் பட்டவர் என்பதும், முதலில் இக்குலோத்துங்கனால் ஆதரிக்கப் பெற்றுவந்த இவர், இவனாட்சி இறுதியிலோ அல்லது இவன் பின்னோன் காலத்திலோ இராஜ கோபத் துக்குள்ளாகி அவன் அம்பால் எய்யப்பட்டு உயிர் துறந் தார் என்பதும், அவ்வாறு துறக்கும் போது சோழ வமிசம் அழியும்படி சபித்துப்பாடினார் என்பதும், இப் பெரும்பாதகத்தைப் பாண்டியன் அறிந்து சோழன்மேற் பழிகூறினான் என்பதும், மற்றும் பல அரிய செய்திகளும் தமிழ்நாவலர் சரிதை, தொண்டைமண்டல சோழ மண்டல சதகங்கள் முதலிய முன்னூற் பிரமாணங் களுடன் ஐயங்காரவர்கள் எழுதிய அக்கட்டுரையால் வெளியாகின்றன. பல நூற்றாண்டுகட்கு முற்பட்ட அந்நூல்களிற் கூறப்பட்ட வரலாறுகள், இக்காலத் தாரது புனைந்துரைச் செய்திகளிலும் சிறந்த பிரமா ணங்கள் என்பதில் சிறிதும் ஐயமில்லை. "ஆவின் கொடைச்சகர ராயிரத்து நூறொழித்துத் தேவன் திருவழுந்தூர் நன்னாட்டு - மூவலூர்ச் சீரார் குணாதித்தன் சேயமையப் பாடினான், காரார்கா குத்தன் கதை என்ற பழம்பாடலின்படி, கி. பி. 1178-ல் கம்பர் தம்