பக்கம்:மூன்றாம் குலோத்துங்க சோழன்.djvu/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

கலை வளர்ச்சி 53 முன்னு லொழியப் பின்னூல் பலவினுள் எந்நூலாரும் நன்னூ லாருக்கு இணையோ வென்னும் துணிவே மன்னுக - இலக்கணக் கொத்து, 8, உரை என்று பிற்காலத்துச் சைவப்பெரியாரும் கொண்டாடும் படி இன்றுவரையிலும் எல்லாரும் கற்று வருவது இவ் விலக்கண நூல் என்பதை அறியாதார் இல்லை. இச் சீயகங்கனைப்போல, சைனப் பெரியாரான அமித சாகரரைத் தன்னூரில் இருக்கும்படி செய்து அவரால் காரிகை என்ற யாப்பிலக்கணத்தை இயற்றுவித்தவன், தொண்டை நாட்டுக் குளத்தூர்த்தலைவன் என்பதும், அதுபற்றி அவ்வூர்க்குக் காரிகைக் குளத்தூர் என்ற பெயர் நம் சோழன் காலத்துக்குச் சிறிது முன்வரை வழங்கிவந்த தென்பதும் ஒப்பிடத்தக்கன. இப்பெரும் புலவர்களன் றிப் பாண்டிநாடு, தொண்டை நாடு முதலிய நாடுகளில் நம் சோழன் காலத்தும் அதனை ஒட்டியும் விளங்கிய புலவர்கள், பலர் உண்டு. இவர்களுள் மாறவர்மன் குலசேகர பாண்டியனது அவையில் தம் அகப்பொருளை அரங்கேற்றிய நாற் கவிராச நம்பியும், புறப்பொருள் வெண்பாமாலை உரையாசிரியரான சாமுண்டிதேவரும், தொல்காப் பியத்துக்கு உறையிட்டபேராசிரியரும், கப்பற் கோவை, தஞ்சைவாணன் கோவைகளின் ஆசிரியர் களும் குறிப்பிடத்தக்கவர்கள். இக் குலோத்துங்கனைப்போலவே, இவன் காலத் துச் சிற்றரசர்களும் தலைவர்களும் தமிழறிவும் அபி மானமும் மிக்கவர்களாய்ப் புலமையைப் பெரிதும் போற்றி வந்தார்கள். இவற்றை யெல்லாம் இங்கு விரிப்பிற் பெருகும்.