பக்கம்:மூன்றாம் குலோத்துங்க சோழன்.djvu/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

அத்தியாயம் 7 சமய நிலையும் அறச்செயல்களும் நம் சோழர்பெருமான், தன் முன்னோர் போலவே வைதிகமார்க்கத்தை வளர்த்தும், சைவசமயத்தைக் கடைப்பிடித்தொழுகியும் வந்தான். சிவபிரானிடம் இவன் வைத்திருந்த பக்தியை காமாரிக் கன்பன்" (468) "வெள்விடையோன் தன்னேயந்தன்னை மறவாதவன்' "நாகாபரணனை யேத்துவோன் (88) என்று இவ்வாறு பலவிடங்களிலும் இவன் கோவை சிறப்பிக்கின்றது. திருவாரூர்ச் சிவபிரானே இக் குலோத்துங்கனை 'நம் தோழன்' என்று கூறியதாகதம் கோயில் ஸ்தானத்தார்க்கு அப்பெருமானே இடுங் கட்டளை முறையில் 24-ம் ஆண்டுச் சாஸனமொன்று குறிப்பிடுகின்றது. இதனால், சிவபக்தியின் சிறப்புத் தெளிவாகக் கூடியது. 'நம் தோழன்' என்றது, சுந்தர மூர்த்திநாயனாரைத் தம்பிரான் தோழர் என்ற வழக்குப் போன்றதாகும். இக்குலோத்துங்கனது முன்னோர்களிலே, முதல் இராஜராஜசோழன், அவன் மகன் இராஜேந்திரன் முதலி யோர் வடதேசத்திலிருந்து சைவாசாரியர்களை வர வழைத்து, அவர்களைத் தங்கள் இராஜகுருக்களாகக் கொண்டு உபதேசம் பெற்றவர்கள். சமய விஷயங்களில் இவ்வாசாரியர்கட்குச் சோழராஜ்யத்திலிருந்த செல் வாக்கு மிக அதிகம். அம்முன்னோர் முறைமைப்படியே, இவனுக்கு ஞானாசாரியராக இருந்தவர் ஈசுவர சிவன் என்ற சைவப் பெரியார். இவர் ராதா (லாட) தேசத்த