பக்கம்:மூன்றாம் குலோத்துங்க சோழன்.djvu/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

62) மூன்றாம் குலோத்துங்க சோழன் வர்கள். சங்க காலத்தில், கடை யெழுவள்ளல்களுள் ஒருவனாய் விளங்கிய மலையமான் திருமுடிக்காரி இக்குலத்து முன்னோன் ஆவன். சேதிராஜ குலத்தவ ராதலால் சேதிராயர் என்றும், கோவலூர் அதிபர்க ளாதலால் கோவலராயர் என்றும், மலாட்டுக் குரியவ ராதலால் மலையர், மலையரயர், மலயகுலராயர் என்றும் இவர்கள் வழங்கப் பெற்றனர். இவர்கள் பெரும்பாலும் விஷ்ணு பக்தியுடையவர்கள். " பொற்புடைய மலை யரையன் பணிய நின்ற பூங்கோவலூர் தொழுதும்' என்று திருமங்கையாழ்வாரும் இவர்களைச் சிறப்பித்துள் ளார். சோழ ஏகாதிபத்தியத்தில் இவர்கள் நெடுங் காலமாகத் தலைமை வகித்து வந்ததோடு, அச் சோழ வேந்தர்க்கு மகட்கொடுத்துச் சம்பந்தம் புரிந்தும், சங்ககாலத்திற்போலவே போர்க்காலங்களில் உதவியும் வந்தனர். முதல் இராஜராஜனுடைய தாய் இம் மலையர் குலத்துதித்தவள் என்று திருக்கோவலூர்ச் சாஸனங் கூறுகின்றது. பிற்காலத்தில் கிளியூர், ஆடையூர் முதலியவை இவர்களுக்குத் தலைநகர்களா யிருந்தன. நம் சோழன் ஆட்சியில் விளங்கிய இம் மலையர் குலத்தவர்களுள், 1. மலைமான் பெரியுடையானான இராஜராஜச்சேதியராயர், 2. மலையன் நரசிம்மவர்மன் கரிகாலசோழ ஆடையூர் நாடாள்வார் என்ற இருவரும் சிறந்தவர்களாகவும், மற்றச் சாமந்தர்களால் பெரிதும் மதிக்கப் பெற்ற தலைவர் களாகவும் தெரிகின்றனர். இவருள், இராஜராஜச் சேதியராயர்க்குச் சேனைமீகாமன்' என்ற சிறப்புப்