பக்கம்:மூன்றாம் குலோத்துங்க சோழன்.djvu/7

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

மூன்றாம் குலோத்துங்க சோழன் தமையால் பாண்டி நாடு தென்புலம் என்றும் கூறப் பட்டன. தமிழகத்தின் இம் மூன்று இராஜ்யங்களும் எந்தக் காலத்தில் நிறுவப்பெற்றவை என்பது தெரிய வில்லை. அதனால் இந்த மூன்று நாடுகளின் அரசர் களையும் படைப்புக்காலந்தொட்டு மேம்பட்டுவரும் பழங் குடியினர் என்று முன்னோர் பொதுவாகக் கூறலாயினர். ஆதி இதிகாசங்களான இராமாயண மகா பாரதங்களில் இந்நாடுகளின் இயல்புகளும் அரசர்களைப்பற்றிய செய்தி களும் சிறப்பித்துக் கூறப்பட்டுள்ளன. புத்த பகவானது முற்பிறவிகளைப் பற்றிக் கூறும் ஜாதகக்கதையொன்றில், சோழரது ' தமிளராஜ்ய'மும் அதன் தலைநகரான காவிரிப்பூம்பட்டினமும் குறிக்கப்பட்டிருக்கின்றன. மௌரிய சக்கரவர்த்தியாய் இப் பரதகண்டத்தின் பெரும்பகுதியும் தன் ஒரு குடைக்கீழ் வைத்தாண்ட அசோகனது காலத்தில், இத் தமிழகம் அவன் ஆட்சிக்கு உட்படாமல் மூவேந்தர்க்கே உரிய தனி நாடாய் விளங்கிய செய்தி அவனது கல்லெழுத்துக் களால் தெரியவருகின்றது. தென்னாட்டின் முடியுடைவேந்தரான இம் மூவருள் நடுநாயகமாய் விளங்கியவர்கள் சோழ மன்னர்களாவர். இவர்கள் ஆட்சிக்கு உட்பட்ட குணபுலமானது, வானம் பொய்யாமற் பெய்து காலத்திற் பெருக்கெடுக்குங் காவிரி யாற்றின் நீர்ப்பாய்ச்சலால் பெருவளம் படைத்த பிர தேசமாகும். நீர்வளம்பற்றியே 'புனனாடு' எனவும் இது பெயர்பெற்றது. தண்ணீருங் காவிரியே தார்வேந்தன் சோழனே மண்ணாவ துஞ்சோழ மண்டலமே. (த.நா. சரிதை) சோழவளநாடு சோறுடைத்து" (தனிப்பா)