பக்கம்:மூன்றாம் குலோத்துங்க சோழன்.djvu/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

சாமந்தர்கள் 67 சுரங்கமுள்ள குவளாலபுரம் என்ற கோலார் ஆகும். இது கொங்கு நாட்டின் பக்கத்தில் உளது. இங் நகரத்தை நம் சோழன் காலத்தே ஆண்டவர்களுள் அமராபரணன் சீயகங்கன் என்பான் முக்கியமானவன் எனத் தெரிகின்றது. இவ னுக்கு ' வீரகங்கன்,' ' வெட்டும் அமராபரணன் என்ற வேறு பெயர்களும் உண்டு. இவன் தேவி அரிய பிள்ளை என்பாள். நம் சோழனது 3-ஆம் ஆண்டு முதல் 36-ம் ஆண்டுவரை இச் சீயகங்கன் விளங்கினான். இவன் தன் கங்கநாட்டுக்கு உரிய கன்னடமொழியில் அபி மானம் செலுத்தியவனாகத் தெரியவில்லை. ஆனால், தமிழபிமானம் மிகப் படைத்து, தமிழ்ப் பெரும் புலவர்களை ஆதரித்து வந்திருக்கின்றான். இச் சீயகங்க னுக்கு வழங்கிய சிறப்புப் பெயர்களும், இவன் தேவியின் பெயரும், இவனது தமிழ்ச்சாஸனங்களும், தமிழ் நாட்டுத் தலங்களுக்கு இவன் செய்த அறச்செயல்களும் இவனைச் சிறந்த தமிழன் என்றே சொல்லும்படி உள்ளன. தனது கங்கநாட்டுக் கடுத்துள்ள சீனாபுரம் என்ற சனகையில் சைனப் பெரியாராய் வாழ்ந்த பவணந்தி முனிவரைக்கொண்டு, நன்னூல் என்னுஞ் சிறந்த இலக்கண நூலை ஆக்குவித்தனன் இவ் வருங்கலை விநோதன். இவ்வாறு இவன் படைத்த பெருந் தமிழபி மானம் தியாகவினோதனான நம் தமிழ்ச் சக்கரவர்த்தி யின் சம்பந்தத்தால் உண்டானது என்றே சொல்லலாம். இச் சீயகங்கனை யன்றி, பங்கள நாட்டுப் பிருதி கங்கன் அழகிய சோழன் உத்தம சோழகங்கன்' என்பவர்களும் நமது அரசன் காலத்து வாழ்ந்த கங்கர் களாகத் தெரிகின்றனர்.