பக்கம்:மூன்றாம் குலோத்துங்க சோழன்.djvu/74

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

சாமந்தர்கள் 69 மேற்கூறிய சிற்றரசர்களும் தலைவர்களும் தத்தம் நாடுகளில் சுதந்தரம் பெற்று ஆண்டுவந்தவர்களே. இவர்கள், சிற்சில சமயங்களில் தங்களுக்குள் மாறுபாடு கொண்டு சோழ ஏகாதிபத்தியத்துக்கு இடையூறு விளைத்ததும் உண்டு. அக்காலங்களில் அவ்வேகாதி பத்தியத்தின் நன்மையின் பொருட்டும், தம் சக்கர வர்த்தியின் கௌரவம் சிதையாமைப் பொருட்டும், இவரெல்லாரும் ஒருங்கு கூடி அரசனுக்கு அடங்கி நடப்பதாக உடன்படிக்கைப் பிரமாணம் (நிலைமைத் தீட்டு) எழுதி ஒற்றுமைப்பட்டும், ஆணைக்கடங்காதாரை அடக்கியும் வந்திருக்கின்றனர். உதாரணமாக, நம் சோழனது 27-ஆம் ஆண்டில், 1. பாண்டியநாடு கொண்டானான சம்புவராயன் 2. செங்கேணி அத்திமல்லன் வீராண்டனான எதிரிலி சோழ சம்புவராயன் 3. கிளியூர் மலையமான் பெரியுடையானான இராஜ. ராஜச் சேதியராயன் 4. கிளியூர் மலையமான் ஆகார சூரனான இராஜ கம்பீரச் சேதியராயன் 5. குந்தன் நம்பூரலான இராஜராஜ நீலகங் கரையன் 6. அம்மையப்பன் மருதனான இராஜராஜ. மூவேந்தரையன் 7. பாவந்தீர்த்தானான இராஜேந்திர சோழச் சம்புவராயன் 8. நரசிங்கபன்மனான கரிகால் சோழ ஆடையூர் நாடாழ்வான் 9. சோமன் திருவண்ணாமலை யுடையானான குலோத்துங்க சோழ பிருதிகங்கன்