பக்கம்:மூன்றாம் குலோத்துங்க சோழன்.djvu/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

72 மூன்றாம் குலோத்துங்க சோழன் கலம் சாஸனங் கூறுகின்றது. காவிரிப் பெருக்கு அடங் கும்படி கம்பநாடர் ஒருசமயம் பாடிய தாகக் கூறப்படும் வெண்பா இதுபோன்ற பெருவெள்ளம் பற்றியது போலும். 4. சூறாவளிப் புயல் :- மேற்படி ஆண்டிலேயே செம்பொனார் கோயிலில் திருவாசல் ஒன்றும், வடக்குத் திருமதிலும், தேரேற்றுகூடமும், பெரும்புயலால் விழுங் தழிந்தன வென்றும், இவை ஆக்கூர் நாடாள்வான் என்பவரால் திரும்பக் கட்டப்பட்டன என்றும் மேற்படி யூர்ச் சாஸனம் கூறுகின்றது. 5. படையேறு குழப்பம் :- மேற்படி செம் பொனார் கோயில் பிரதான மூர்த்தியும் நாயன்மார் விக்கிர கங்களும் இராஜாதிராஜசோழனது 11-வது ஆட்சி வருஷம் துரிதகாலமாய்ப் படையேறிய' படியால், திருவிடைகழிப் பிள்ளையார் கோயிலுக்குக் கொண்டு போகப்பட்டன என்றும், அவை நம்மரசனது 6-ஆம் ஆண்டில் உரிய தலங்களில் மீளப் பிரதிஷ்டிக்கப் பெற்று உற்சவங்களும் நடத்தப்பட்டன என்றும் அச் செம் பொனார்கோயிற் கல்வெட்டிற் காணப்படுகின்றது. 'துரிதகாலமாய்ப் படையே றிய என்றது, ஈழப் படைகள் பாண்டிய நாட்டுப்போரில் இழைத்தது போன்று சோழநாட்டிலும் புகுந்து சில அதிக்கிரமங் கள் செய்ததைக் குறிப்பிடுவது போலும். 6. குகையிடி கலகம் :- நம் சோழனது 22-ஆம் ஆண்டில் மேற்கண்ட கலகமொன்று நாட்டில் நடந்ததென்றும், அப்போது பல குகைகள் அழிக்கப் பட்டன வென்றும், அவற்றுள் திருத்தருப்பூண்டியி லிருந்த குகையொன்று அதன் சொத்துக்களுடன் பாழ் படுத்தப்பட்டது என்றும், நம் அரசனுக்குப் பிற்பட்ட