பக்கம்:மூன்றாம் குலோத்துங்க சோழன்.djvu/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

நாட்டுச் செய்திகளும் வழக்குகளும் 73 சோழன் சாஸனம் ஒன்றால் அறியப்படுகிறது. குகை என்பது துறவிகள் வாழும்மடம் ஆகும். திருமுறைத் தேவாரச் செல்வன் குகை (ME. R. 10 of 1918) திருத்தொண்டத் தொகையான் குகை கை என்று, இத்தகைய மடங்கள் சாஸனங்கள் மூலம் அறியப்படுகின்றன. குகை நமச்சிவாய தேசிகர், குகை ஈசுவர சாமியார் என்ற பிரசித்தரான துறவி கள் குகைத்தலைவர்களாய், ஞானச்செல்வமும் உபதேசத் திறமும் பெற்று விளக்கினவர்கள். இம்முனிவர் மடங் களின் மேல் தொடுக்கப்பட்ட கலகம் இன்ன காரணம் பற்றியது என்று தெரியவில்லை. முதல் இராஜராஜன் இராஜேந்திரன் முதலிய சோழவேந்தர்க்கு 'ராஜ குரு'க்களாய் இருந்தவர்கள் இலாடம், காசி, காசுமீரம் முதலிய வட நாடுகளிலிருந்து அவரால் வரவழைக்கப் பட்டவர்கள். இன்னோர் கோளகி மடம், லக்ஷாத்யாய மடம், பிக்ஷாமடம் முதலிய சைவாதீனங்களின் தலைவர் களாய் அரசாங்கத்தில் மிக்க செலவாக்குப் பெற்று விளங்கினர். நம் சோழன் காலத்தில் ராஜகுருவா யிருந் தவர் இலாட தேசத்தவரே. இவனது ஆட்சியிலும் அவ்வாசாரியர்களின் செல்வாக்கு அதிகமே. மேற் கூறிய குகைமடங்களில் வாழ்ந்த துறவிகள் தங்கள் ஞான சீலங்களாலும் உபதேசங்களாலும் நாட்டு மக்க ளால் நன்கு மதிக்கப்பட்டுப் பிரபலம் பெற்று வந்ததைக் கண்டு பொறாத இவ்வடதேசத்துக் குருமார்களால் இக் கலகம் ஏற்பட்டதோ என்று ஐயம் நிகழ்கின்றது. நம் அரசனுடைய ஆட்சியில் உண்டான இக்கலகம், அவ னால் அடக்கப்பட்டதாகத் தெரியவில்லையாயினும், பின் வந்த மூன்றாம் இராஜராஜன் ஆட்சியில், இக் குகைகள் மீண்டும் தோன்றித் திகழ்ந்தன என்று தெரிகின்றது.