________________
74 மூன்றாம் குலோத்துங்க சோழன் 7. சககமனம் அல்லது உடன்கட்டை யேறல் :நம் சோழன் ஆட்சியில், இராஜராஜ மலயகுலராயன் என்ற சிற்றரசனுடைய மனைவி யொருத்தி சககமனஞ் செய்வதற்கு முன், தன் கணவனுக்குப்பின் தான் உயிர் வாழ்வளாயின், உடனொத்த சக்களத்தியர்க்கு அடிமை யாவேன் என்றும், தன்னைத் தீப்பாய வேண்டாவென்று தடுப்பவன் தன் மனைவியைப் பிறர்க்களிக்கும் பாவத்திற் படுவான் என்றும், தன்னைக் கட்டி அக்கினியில் இட்டுத் தன்னுயிர்போகச் செய்யாதவரும் அத்தகைய கொடுஞ் செயல் புரிந்தோராவர் என்றும் கூறியிருத்தல் குறிப் பிடத்தக்கது. இவள் 'தேவப்பெருமாள்' என்ற பெய ருடையா ளென்றும், அத் தலைவனுடைய வேலைக்காரி என்றும் எலுவனாசூர்க் கல்வெட்டுக் கூறுகின்றது. இத்தனை சபதங்கள் கூறியவள் முடிவில் தீப்பாய்ந்து உயிர்விட்டிருப்பாள் என்றே கருதலாம். இச் சபதம், பூதப் பாண்டியன் தேவி தீப்பாயும் போது கூறிய பல் சான் றீரே, பல்சான் றீரே' என்ற புறப்பாட்டை (246) ஞாபகப்படுத்துகின்றது. பொதுவாக, சோழர் ஆட்சியில் உடன்கட்டை யேறும் வழக்கு அருகியே காணப்படுகிறது. முதல் இராஜராஜ சோழன் தாய், இருக்குவேளின் தேவி போன்ற சிலர் தீப்பாய்ந்த செய்தி கேட்கப்படுவது தவிர, வேறு தெரியவரவில்லை. ஆதலால், மலயகுலராயன் மனைவியின் இச் செயலும் அக்காலத்தில் நடந்த அரியதொரு நிகழ்ச்சியே என்னலாம். 8. ஆண்மக்களின் நிருத்தம் :- தேவரடியாரான பெண்மக்கள் ஆலயங்களிலும் அரசரோலக்கங்களிலும் கூத்து நிகழ்த்திவந்தது போலவே, நாட்டியக் கலையில் வல்ல ஆண்மக்களும் தெய்வசந்நிதிகளிலும் அரசர் ஆஸ்தானங்களிலும் தங்கள் ஆடல்வன்மையைக் காட்டி