பக்கம்:மூன்றாம் குலோத்துங்க சோழன்.djvu/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

நாட்டுச் செய்திகளும் வழக்குகளும் 77 தனாலும் இரட்டவரசனான கன்னரதேவனாலும் மதுரை கொண்ட சோழனான கோப்பரகேசரியாலும் நம் அரச னாலும் முன்னரே அமைந்ததையும் அச்சாஸனம் குறிப்பிடுதல் காணலாம். 11. அரசனுக்கு நன்மை வேண்டிச் செய்யும் அறம் :- நம் சோழ வேந்தனிடமும் அவன் அரசினிட மும் அபிமானம் மிக்க தலைவர்களும் மேன்மக்களும் அவ னது நல்வாழ்வை விரும்பி, கோயில் முதலியவற்றிற்கு அறங்கள் புரிந்து வந்தனர். இவனது 16-ஆம் ஆண்டில், அதிகாரியான அரையன் இராஜராஜ தேவன் வாணாதி ராயர் திருக்கடையூர்க் கோயிலுக்குத் தம் அரசனது நன்மையின் பொருட்டு இறையிலியும், 35-ஆம் ஆண்டில் எதிரிலி சோழக் கடம்பராயர் என்பார் தம்மரசனான "உலகுடைய நாயனார்" மதுரைக்கு எழுந்தருளின நாளில் திருமேனிக்கு நன்மை உண்டாகத் தம்மூர்க்கோயி லுக்கு நிலங்களும் அளித்து தவிய செய்திகள் சாஸனங் களால் தெரிய வருகின்றன. இவற்றை நோக்குமிடத்து, தம் வேந்தனுக்கு உடம்பு அசௌக்கியமோ பிற துன்பங் களோ நேர்ந்தவிடத்து, அவை நீங்க வேண்டித் தம் அபிமான தேவதைகளுக்கு அரசனைச் சார்ந்தவர்கள் பிரார்த்தனை புரியும் வழக்கம் இருந்தமை அறியலாகும். இப்பிரார்த்தனைகள் தலைவர்களுக்கும் அவரைச் சார்ந் தோரால் நடத்தப்பட்டன. 12. சூளுறவுகள் :- அறங்களோ, உடன்படிக்கை களோ செய்பவர், அவற்றுக்குக் கேடு விளைவிப்போர் கங்கையிடைக் குமரியிடைச் செய்தார் செய்த பாவத்திற்படுவா ராகவும்' * ஏழாநரகிற் கீழாநரகம் புகுவா ராகவும் என்றும், செய்துகொண்ட ஒப்பந்தம் மீறுவோர்