பக்கம்:மூன்றாம் குலோத்துங்க சோழன்.djvu/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

78 மூன்றாம் குலோத்துங்க சோழன் " இப்படித் தப்பினேனாகில் எனக்கின்னாத சரிமாழ் வான்-செருப்பு மெடுத்துத் தம்பலமும் தின்றேனாவேன்' "இப்படித் தப்பினேனாகில் என்னோட்டை யானே எடுத்துத் தம்பலமும் கலச்சோறும் தின்றேனாவேன் "இப்படித் தப்பினோமாகில், (பகைவனுக்குக்) கடை (காக்கும் பறையர்க்குச் செருப்பு எடுக்கிறோம் என்றும் இவ்வாறு கடுமையான முறையில் சபதம் கூறுதல் பெரிய தலைவர்களுக்குள்ளும் வழக்கமா யிருந்தது என்று தெரிகிறது. 13. நாட்டுத்தலைவர்களின் உடன்படிக்கைகள் :சோழ ஏகாதிபத்தியத்தில் தலைவர்கள் பலர் தத்தம் நாடுகளில் சுதந்திரமாக ஆண்டுவந்தனர் என்றும், அவ ரெல்லாரும் தம் சக்கரவர்த்தியின் திருவாணைக்கு அடங்கி உற்ற காலங்களில் உதவி வந்தனர் என்றும் மேலே கூறி யுள்ளோம். இவர்கள் சில சமயங்களில் தங்களுக்குள் மாற்சரியத்தாலோ , எல்லை வழக்குப்பற்றியோ மாறு பட்டுக் கலகம் விளைத்து அரசன் ஆணையை மீறி நடந் ததும் உண்டு. இவ்வாறு மீறி நடந்தபோது, சக்கர வர்த்தியிடம் மிகுந்த அபிமானம் உடையவரெல்லாரும் திரண்டு, பகைத்த தலைவரிடம் விரோதம் கொண்டு அவரை அடியோடு அழித்துவந்தனர். 14. அரச குலத்து முதிய பெண்மக்கள் :- நம் குலோத்துங்கனது 5-ஆம் ஆண்டில் முதற் குலோத்துங் கன் மகள் அம்மங்கை என்பாள் ஜீவந்தையா யிருந்தாள் என்பது சிதம்பரம் கல்வெட்டொன்றால் தெரியவருகின் றது. அதில், "சுங்கந் தவிர்த்த ஸ்ரீ குலோத்துங்க சோழ