________________
நாட்டுச் செய்திகளும் வழக்குகளும் 79 தேவரின் திருமகளார் பெரிய நாச்சியாரான அம்மங்கை யாழ்வார் என்று இவள் வழங்கப்பட்டுள்ளாள். முதற்குலோத்துங்கன் இறுதிநாளில் இவள் 15-வய துடையவளாயிருந்தவள் என்று கொண்டா லும், நம் சோழனது 5-ஆம் ஆண்டில் 76 வய துள்ளவளாய் இருந்திருக்க வேண்டும். இவ்வயதி னும் சிறிது அதிகமாக இருந்திருத்தலும் கூடி யதே. எவ்வாறாயினும், நான்கு தலைமுறைக்கு முன்பு ஆண்ட அரசன் ஒருவனுடைய மகளின் பிரஸ்தாபம் இவன் சாஸனத்திற் பயிலுதல் குறிப்பிடத் தக்கதே யாகும். 15. குலோத்துங்கனது சிறப்புப் பெயர்கள் :- நம் சோழ வேந்தனுக்கு நாட்டில் வழங்கிவந்த சிறப்புப் பெயர்கள் பல. அவற்றுள், பரம்பரைப் பெயர்களான பரகேசரி, திரிபுவன சக்கரவர்த்திகள் என்பவை எல்லாச் சாஸனங்களிலும் பயில்வன. இவையன்றி, குலோத் துங்கன் என்பதும் வீரராஜேந்திரன் என்பதும் 36-ஆண்டுகளுக்கு மேற்பட்டுப் பொதுவாய் வழங்கிவந்த பெயர்களாகும். இளமையில் இச்சோழன் குமார குலோத்துங்கன் என்றும் வழங்கப்பட்டான். கருவூர் வெற்றிக்குப்பின் முடிவழங்கு சோழன், சோழகேரளன் என்ற நாமங்கள் இவனுக்கு அமைந்தன. இவன் பெய சால் அக் கருவூரும் ' முடிவழங்கு சோழபுரம்' என்ற பெயர் பெறலாயிற்று. கொங்குச் சேரர்க்குத் தான் வென்ற சேரவரசை யளித்து, அவர்முடியை வழங்கின மையால் இப்பெயர் வந்ததென்று தோன்றுகிறது. இக் குலோத்துங்கனது 24-ஆம் ஆண்டுக்குப்பின் இறுதி வரையிலும் இவனது பிரபல நாமமாக வழங்கி வந்தது திரிபுவனவீரதேவன் என்பது. ' தமிழ்நாடு மூன்றனையும் வென்றாளும் வீரன்' என்பது இதன் உட்கருத்தாகக்