பக்கம்:மூன்றாம் குலோத்துங்க சோழன்.djvu/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

85 அரசியல் பாடி, நுளம்பபாடி, வேங்கைநாடு, இலங்கை என்பவை இவ் வேகாதிபத்தியத்தில் அடங்கிய மண்டலங்களே. முதல் இராஜராஜ சோழன் இவற்றுட் பலவற்றை வென்று கொண்டவனாதலால், அவன் பெயரால் ஜயங் கொண்ட சோழ மண்டலம் (தொண்டைநாடு), மும்முடிச் சோழ மண்டலம் (இலங்கை), முடி கொண்ட சோழ மண்டலம் (கங்கபாடி) என்று இவ்வாறாக அவை வழங்கப்பட்டன. நம் குலோத்துங்கன் காலத்திலும் இப் பெயர்களே பெரும்பான்மை வழக்கில் இருந்தன. இவ்வேகாதிபத்தியத்துள் தலைமையான நாடு சோழமண்டலம். இது 9 வளநாடுகளாகவும் 79 நாடு களாகவும் வகுக்கப்பட்டிருந்தது. இம்மண்டலம் பெரிய நாடு எனவும் பெயர் பெறும். இப்படிக்குக் கல் வெட்டினோம் எழுபத்தொன்பது பெரிய நாட்டோம்” என்பது சாஸனத் தொடர். 'நாமே நாட்கவி பாடு நாட்போ லிருப்பது பெரிய நாடே ' என்றார் கூத்தரும். நகரங்கள் :- சங்க காலத்தில் சோழவேந்தர்க்குத் தலைநகரங்களாய் இருந்தவை கோழி என்ற உறையூரும் புகார் என்ற காவிரிப்பூம் பட்டினமுமாகும். விஜ யாலயன் வழியில் வந்த சோழர் காலங்களில் ஆயிரத் தளி, தஞ்சை, கங்கைகொண்ட சோழபுரம், இராஜ ராஜபுரம் என்பவை இராஜஸ்தலங்களா யிருந்தன. நம் சோழன் காலத்தில் தலைநகரமாய் இருந்தது கும்ப கோணத்தை அடுத்துள்ள ஆயிரத்தளியே யாகும். நந்திபுரம், பழையாறை, முடிகொண்ட சோழபுரம் என்றும் இது வழங்கப்பட்டது. இச் சோழன், பாண்டியனது தலைநகரான மதுரையில் அவனுக்குச் செய்த பரிபவங்களையும், அங்கே செய்துகொண்ட விஜயாபிஷேகத்தையும், ஜடாவர்மன் சுந்தரபாண்டியன் என்பவன் பின்பு சோழர் தலைநகரான இவ்வாயிரத்