பக்கம்:மூன்றாம் குலோத்துங்க சோழன்.djvu/91

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

86 மூன்றாம் குலோத்துங்க சோழன் தளியில் பழிவாங்க வேண்டித் திருப்பிச் செய்தான் என்பது அப் பாண்டியன் மெய்க்கீர்த்தியால் தெரிய வருகின்றது. இதிலிருந்து, நம் சோழன் அமர்ந்து ஆட்சி செய்த தலைநகர் ஆயிரத்தளியே என்பது தெளியப்படும். இரண்டாம் இராஜராஜன் தனக்குப் பின் ஆள்வதற்கு இராஜாதிராஜனை யுவராஜனாக்கி அன்றே இறந்த இடமும் இவ்வாயிரத்தளிப் படை வீடே. இராஜராஜனால் அபிமானிக்கப்பட்ட வேறு தலை நகரம் இராஜராஜபுரம் என்பது. இதனைத் தாராசுரம் என இக்காலத்தார் வழங்குவர். அளகை என்னும் நகரை நம் சோழனுக்கு உரிய தாகக் குலோத்துங்கன் கோவை பலவிடத்தும் கூறுகின்றது. இது இராஜராஜபுரம் ஆகலாம். காவிரிப்பூம்பட்டினத்தைக் காட்டிலும் நாக பட்டினம் இச் சோழன் காலத்தில் சிறந்த கடற்றுறை நகரமாய் இருந்ததென்று அக்கோவையால் (105) தெரியவருகின்றது. அரசியல் தலைவர்கள் :- அரசனுக்குத் தலைமை யமைச்சன் ஒருவன் உண்டு. இம் மந்திரியே அவனால் விபவங்கள் பலவும் பெற்று, எல்லா அரசியல் துறைகளுக் குந் தலைவனாய் விளங்குபவன். நம் அரசனாட்சிக்காலத்தில் தலைமை மந்திரியா யிருந்தவர் எவரென்று தெரியவில்லை. இனி, தலைமை யமைச்சனை யடுத்த அரசாங்க அதிகாரி கள் 'உடன் கூட்டத்துப் பெருமக்கள்' எனப்படுவர். இவர்களை முதலிகள்' என்றும் வழங்குவர். தலைமை மந்திரியைப் போலவே அரசனால் வரிசைகள் பெற்று அவனுடன் இருந்து ஆலோசனை கூறியும், அரசியல் துறைகளை நிர்வகித்தும் வந்தவர்கள் இன்னோர். திரு மந்திரவோலை, விடையிலதிகாரி, வரிக்குக் கூறு செய் வார், நாட்டதிகாரி என இவர்கள் பலவகையினராய் இருந்தனர். இவருள், திருமந்திரவோலை என்பவன்