________________
92 மூன்றாம் குலோத்துங்க சோழன் அதிகாரிகளான வாணாதிராசர், நுளம்பாதிராசர், வரிக்குக்கூறுசெய்வார் இவர்களுக்கு அவ்வழக்கை ஆராயும்படி உத்தரவிட்டான். அதன்படி அவர்கள் கூடிச் செய்த விசாரணையில், திருவாவடுதுறையார் கொண்டாடும் பாத்தியம் தவறு என்றும், திருவாலங் காட்டார்க்கே அஃது உரியதென்றும் முடிவு செய்யப் பட்டது. இத்தீர்மானத்தை அரசனுக்கு அறிவித்த தும், அவன் ஆணைப்படி அந் நிலவுரிமை திருவாலங் காட்டார்க்கே திருப்பி அளிக்கப்பட்டது. இவ்வாறே நம் வேந்தனது 17-ஆம் ஆண்டில் திருமாகாளத்துக் கோயில் நிலத்தை விடுதீட்டுப்' பெற்றுத் தாம் அடைந்திருப்பதாக இராஜபவித்திரப் பல்லவராயர் என்ற அதிகாரி பாத்தியங்கொண்டாடினார். அப்போது வாணாதிராசர், நுளம்பாதிராசர் என்ற வேறு அதிகாரிகள் இருவர் அந்நிலம் கோயிலுக்கு உரியதென்று கூற, அவ்வழக்கு வேசாலிப் பேரரையர் என்பவரால் விசாரிக்கப்பட்டு, பல்லவராயர் கொண் டாடிய பாத்தியத்துக்கு ஆதரவில்லை யென்றும், கோயிலுக்கே அஃது உரியது என்றும் தீர்மானிக்கப் பட்டது. மேற்கூறியவை போன்றவை மற்றும் பல உண்டு. இவற்றால், நகர கிராம மகாசபைகளும், நாட்டாரும், அரசனும், நாட்டு வழக்குக்களையும் குற்றங் குறை களையும் நன்கு ஆராய்ச்சி செய்து வந்தமையால் நீதிபரிபாலனம் நெறிமுறை பிறழாமல் நடந்துவர லாயிற்று என்பது அறியலாகும். இனி, அரசியலுக்குரிய துறைகளாக அமைந் தவை எத்தனையோ உள்ளன. குடிகளின் பாத்தியா பாத்தியங்களும், நிலங்களின் அளவைத்திட்டமும், அவற்றிற்கு ஏற்பட்ட அரசிறை முதலிய வரி விகிதங்