பக்கம்:மூன்றாம் குலோத்துங்க சோழன்.djvu/99

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

94 மூன்றாம் குலோத்துங்க சோழன் முடிவுபெறவே, சோழ ராஜ்யபாரம் தன்னைத் தாங்க வல்ல இவன் தோள்களிலே சலனமின்றித் தங்கியது. இச் சோழனை, இவன் முன்னோனான முதற் குலோத்துங்கனது அமிசாவதாரம் என்றே சொல்ல லாம். பெயர் ஒற்றுமையும், அந்நிய மரபிலிருந்து புகுந்து அரசுக்கு உரிமை பூண்ட ஒப்புமையும் முன்பே தெரியவந்தவை. இதை தவிர, வீரம் நியாயம் தியாகம் என்ற மூன்று ராஜகுணங்களையும் மும்முரசங்களால் முழக்கிய தன்மையிலும் இவ்விருவரும் பெரும்பாலும் ஒத்தவர்களே. (1) வீரத்திறம் :- நம் சோழர் பெருமானது வீரப் பெருமைகளை இன்னும் விவரித்தல் மிகையாகும். இவன் காலத்தும் இவன் தம்பியான சங்கரராஜன் காலத்தும் வாழ்ந்தவராக அறியப்படும் சங்கரசோழனுலா ஆசிரியர், மற்றெல்லாச் சோழரினும் அதிகமான வீரச் சிறப்பைப் பெற்றவன் குமார மகீதரன் எனப்பட்ட இக் குலோத் துங்கன் என்று கூறியிருத்தல் முன்பே குறிப்பிடப் பட்டது. அவர் கூறியவாறு, போரில் பல்லாயிரவரைக் கொன்று அவர் தலைகள் குருதிவெள்ளத்தில் மிதப்பப் பேய்கட்கு விருந்தளித்து, மாற்றரசரிடம் திறை கொண்டு, தனது புலிக்கொடியை அரசர் பலரும் அணி யச்செய்த வெற்றிச் சிறப்பியல்பினாலேயே வீரராஜேந் திரன், திரிபுவன வீரன் என்ற பெயர்கள் இவனுக்கு வாய்த்த ன. புலவர் பெருமானான கம்பரும், 12 புவி புகழ் சென்னிபோ ரமலன் "சென்னிநாட் டெரியல் வீரன் என்று இக்குணப்பெயர்களால் இவனைக் குறிப்பிட் டிருத்தல் அறியத்தக்கது. இக் குலோத்துங்கன் பெரும்