பக்கம்:மூன்றும் ஆறும்.pdf/10

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூன்றும் ஆறும் & 8. எவற்றையும் கூறாமல், தம் முன்னோர் சொன்ன கருத்துக் களையும் செய்யுட்களையும் எடுத்து வைத்துக்கொண்டு, அவற்றிற்கு அலங்கார வார்த்தைகளால் அழகாக முலாம் பூசிக் கவிதை என்ற பெயரில் வெளியிடுவோரும் உளர். இதற்கு உணர்ச்சி மட்டும் இருந்தால் போதும்; சிந்தனை தேவையில்லை. - நமது கண்களுக்குச் சாதாரணமாகப் படும் பொருட்களை ஊடுருவிப் பார்த்து, அவற்றின் இரகசியத்தை அறிந்து சொற்களால் ஒரு வடிவம் கொடுத்துக் கவிதையாக வெளியிடுவோரும் உளர். இதற்குச் சிந்தனையும் தேவை; உணர்ச்சியும் தேவை. இத்தொகுதியைப் படிக்கும்போது கவிஞர் மீராவிடம் கவிதை எழுதுவதற்குரிய சிந்தனையும் உண்டு; உணர்ச்சியும் உண்டு எனத் தெரிகின்றது. 'மூன்று என்ற எண்ணை அனைவரும் அறிவோம். ஆனால் தமிழில், தன் எண்ணிக்கையையே அளவாகக் கொண்டு - மூன்றே எழுத்துக்களைக் கொண்டு - அமைந்த எண் "மூன்று ஒன்றுதான். இச்சிறப்பை மற்ற எண்கள் பெற்றில’ என்று கவிஞர் கூறும்போது அதில் அடங்கி யுள்ள இரகசியத்தை அறிந்து வியக்கின்றோம். 'எண்களுக்குள் மூன்றுக்கே எழுத்துக்களும் மூன்றாம்; எண்களுள் - வேறெதுவுமந்த எழுத்தால் அமைவதுண்டா?' தமிழில் மூன்றுக்கு உள்ள இச்சிறப்பு ஆங்கிலத்தில் நான்கிற்கு (Four) உண்டு. செய்தி சிறியது; ஆனால் சிந்தனைக்குரியது. இப்படிப் பற்பல.

  • *
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மூன்றும்_ஆறும்.pdf/10&oldid=882964" இலிருந்து மீள்விக்கப்பட்டது