பக்கம்:மூன்றும் ஆறும்.pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மீரா 99

புனலா(று) அன்று - அதுநீள்
மணலா(று) இன்று!-என்றேநாம்
வேடிக்கை யாயுரைக்கும்
வேகவதி[1] யாற்றினிலே
கோடிக்கை வணங்கி நிற்கக்
கோடைச்சித் திரைநாளில்
கள்ளழகர் இறங்குகின்ற
காட்சியினைக் கண்டிருப்பீர்;
உள்ளபடி சொல்வதென்றால்
உண்மைக் ‘கள் ளரும்’ வீணாய்த்
தம்மை ‘அழகரெ’னத்
தருக்கித் திரிவோரும்
உம்மைத் தொகையாகி
உறுத்திக்கொண் டுள்ளதங்கள்
கைவரிசை காட்டிடவே
இறங்குவதும் இந்நாள்தான்!
கை, வரிசை யாய்க்கம்பி
எண்ணுவதோ பின்னால்தான்!

செந்தமிழர் இனிதாகச்
சேரஇளம் பெண்களுடன்
சுந்தரத் தெலுங்கினிலே
பாட்டிசைத்துத் தோணிகளைச்
செலுத்தி விளையாடச்
சிறந்த இடம் எனக்கவிஞன்
நலமான சிந்து
நதியைத்தானே சொன்னான்!


  1. வேகவதி - வைகை