பக்கம்:மூன்றும் ஆறும்.pdf/101

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூன்றும் ஆறும் S. 100 கடத்தற் கரிதான கடலையே ஆறுகளால் கடந்திடலாம் என்றால் கதை என்பீர்; பிறவிக் கடலை உயரொழுக வாறுகளால் எளிதாகக் கடந்திடலாமாம்... முற்றுங் கடந்தோர் உரைக்கின்றார். அடியேன் இனிமேலும் ஆற்றைப் புகழ்ந்து சென்றால் கடல்கத்தும்; மழைமிரட்டும்; காட்டேரி சலசலக்கும் கண்ணிர் விடும் எல்லாம் ஆறாக இதைப்பார்த்துத் தண்ணிர்க் குடும்பத்தில் தகராறு பிள(வு)!-என்று பத்திரிகைக் காரர்கள் பத்திபத்தி யாய்எழுதி எத்திசையும் பரப்பிவிட்டால் என்னாகும் கெளரவமென்(று)" அஞ்சி முடிக்கின்றேன் அஞ்சி வளர்த்ததமிழ் எஞ்ஞான்றும் வாழ்க இனிது f 'நீர்க்குடும்ப கெளரவம். " "Εμιοπα நெடுமான் அஞ்சி.