பக்கம்:மூன்றும் ஆறும்.pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கதிர்

விண்குடும்பத்தை விதியுடன் பொருத்தி "இராசிபலன் சொல்ல முயலும்" என்று கதையளப் போர்க்குக் கை கொடுக்காமல் விண்குடும்பத்தை விழியில் நிறுத்திச் சொல்லணி புனைந்து "சுடர்த்தமிழ் அன்னையின் இராசிபல காட்ட இயலும்' என்று கவியிசைப் போர்க்குக் காது கொடுக்கும் நெய்போன்ற நெஞ்சினர் நிறைந்த இவ்வூர் இராசி புரம்தான்; இராசி புரமேதான்! அரங்கில், கதிரவன் போலக் கம்பீரமாக விளங்கும் கவிஞர் வேந்தே வணக்கம். கதிரவன் முகத்தைக் கண்டதா மரைபோல் மனமும் முகமும் மலந்திருக்கின்ற அன்பரீர். வணக்கம்! அன்னையிர், வணக்கம்! விண்குடும்பத்தை விரிகதிர்ச் செல்வன் தன் குடும்பம் எனச் சாற்றுதல் தகும்; பிற கோள்கள் கதிரவன் குழந்தைகள் என்று தான் விஞ்ஞானங் கண்டவர் விரித்துரைக் கின்றார். f கவியரங்கத் தலைவர் முடியரசன்