பக்கம்:மூன்றும் ஆறும்.pdf/104

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மீரா & 103 கன்னடம் தெலுங்கு கவின்மலை யாளம் துளு எனும் மொழிகளைத் தோற்றிய பின்னும் இளமைத் திறத்துடன் இயங்கும் தமிழ்போல் வியாழன் செவ்வாய் வெள்ளி புதன் சனி என்னும் கோள்கள் தன்னுத ரத்தே உதித்(து) ஒவ்வொன்றும் பற்பல் வாகச் செய்த பின்னும் சிதையா தின்னும் - இளமைத் திறத்துடன் இயங்குவோன் கதிரவன்' மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போட முடியா(து); ஆயினும் விண்ணுக்கும் இந்த மண்ணுக்கும் தமிழர் தொன்னாளி லேயே தொடர்பு கண்டனர்; தொடர்பு கண்டு சுடரும் கோள்களுக்(கு) ஏற்றபெயர்கள் இட்டு மகிழ்ந்தனர். கலத்தில் ஏறிக் கடல்மேற் சென்ற தமிழன் எவனோ தண்ணீர் மேடையில் வெள்ளிப் பணங்களை வீசினாற் போலப் பளிச்சென் றழகாய் வெளிச்சங் காட்டித் துள்ளும் மீனின் தொகையைக் கண்டு, பின் நகைக்கும் வான நட்சத்திரங்களைக் - கண்டு, நல் ஒற்றுமை கண்டு வியந்து 'விண்மீன்கள் என்று விளம்பினான் போலும்! 'இப்பகுதியில் மனோன்மணிய ஆசிரியர் தமிழைப் புகழக் கையாண்ட தொடர்கள் பயின்றுவருதல் காணலாம்.