பக்கம்:மூன்றும் ஆறும்.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூன்றும் ஆறும் & 104 திங்கள் என்றும் திகழ்மதி என்றும் அம்புலி என்றும் அழகிய பெயர்கள் இருக்க நிலவென்றின்னொரு பெயரிட்(டு) அழைத்தவன் உண்மையில் அமைதி விரும்பியே; அண்டை வீட்டிற் சண்டை நிலவுகிற(து) என்றெவ ரேனும் இயம்புவதுண்டா? அமைதி நிலவுவதாகத் தானே அறைகின்றோம் நாம் ஆர்ப்பரிக்காமல் நெடுவானில் அமைதியாய் நிலவுவதாலே திங்களை, ஒருவன் நிலவென உரைத்தான் போலும்! இவற்றைக் காட்டிலும் எல்லையில் லாப்புகழ் பரிதிக் குண்டெனப் பகர்ந்திட முடியும் எனும்விதத் தில்பெயர் இடநினைத் தொருவன். அண்டத்திலுள்ள கோள் அனைத் திற்கும் ஆதி அவன்எனும் உண்மையை ஆராய்ந் (து) ஆதவன் என்றே அழைத்தான் போலும்! இயற்கையைப் போற்றி இன்புற் றிருந்த பண்டைத் திராவிடர் பரிதிக்(கு) உயர்ச்சி தந்தனர்; துதித்தனர்; தாள்பணிந்(து) ஏத்தினர். எகிப்தியர் யவனர் இன்னும் பற்பலர் கதிரைத் தங்கள் கடவுளாய்க் கருதி ஆலயங் கட்டினர் அந்நாள் மன்னர்கள் எங்கள் நற்குலம் இரவிகுலம் என்றே நெஞ்சம் தூக்கி நிமிர்ந்துரைத்தார்கள்! வாலியின் பழியால் வதைபடும் அயோத்தி