பக்கம்:மூன்றும் ஆறும்.pdf/106

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

tEgir K. 105 இராமன் குலத்தை இரவிகுலம் என்றே புலவர் பலரும் புகழ வில்லையா? சாத்தனும் ஒட்டக்கூத்தனும் கம்பனும் காவிரிச் சோழரைக் கதிரவன் சேய்களாய்ச் செப்ப வில்லையா? ஒப்ப வில்லையா? தும்பி மலரைச் சுற்றுவதுண்டு; மலர்போய்த் தும்பியைச் சுற்றுவதுண்டா? தெருவிற் செல்லும் சுந்தரி யாளை இளைஞர் சுற்றி வருதல் இயற்கை; சுந்தரி இளைஞரைச் சுற்றுதல் அரிதாம்! ஆனால் திங்கட் செல்வியும் பூமி தேவியும் கால மெல் லாம் கதிர்க் கோமானைச் சுற்றி வருதல் பற்றி நினைத்தால் நங்கையர்க் குரிய நாண நகையை எங்குவிட் டார்கள் இவர்கள்? என்று நகைவரும் சொன்னால் பகைவரும், அல்லவா? என்றும் கதிரோன் இளையோன் என்பதை இன்னும் கொஞ்சம் எடுத்துரைக் கின்றேன். கொஞ்சும் கணவனுக்(கு) இளையோன் கொழுந்தன் இலையில் இளையது எழிற்கொழுந்(து); இல்லையா? சுடர்விட் டெரிகிற சுடு நெருப்பைத்தான் f திங்களும் பூமியும் கதிரவனைச் சுற்றுகின்றன என்பது அறிவியல், திங்களையும் பூமியையும் பெண்களாகச் சித்திரித்தல் கவியியல்.