பக்கம்:மூன்றும் ஆறும்.pdf/107

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூன்றும் ஆறும் S. 106 கொழுந்துவிட்டெரிகிற(து) என்கிறோம் இல்லையா? வெம்மைக்கு மட்டும் முதிர்ச்சி மிகுதி ஏற்பட ஏற்பட இளமைத் தன்மை கிடைக்கும் வன்மை கிடைக்கும்; எனவே என்றும் கதிரோன் இளையோன் இல்லையா? அன்றொரு நாள். அவள் அரும்பு நதியில் குதித்துக் குதித்துக் குளித்து விட்டுச் சிற்றாடை தன்னைச் சிறுமணற் பரப்பில் காய வைத்தாள்; கதிரவன் உதவினான். இன்னொரு நாள். அவள் எழில்மல ராக மாறிய பருவம் மங்கைநீராடி நிலந் தொடும் தனது நீண்ட கூந்தலை உலர்த்த எண்ணி உயர்ந்த மாடியில் காத்து நின்றாள்; கதிரவன் உதவினான், இப்போ(து) அவளோ, இளமை கன்னிமை இழந்த கூனற் கிழவி அதோ அத் திண்ணையில் டகர எழுத்துப்போல், கால், நீட்டிக் 'கூதல் ஆட்டு கின்றதே வெயில் அடிக் காதா விரைவில்?' என்றுதன் 'பொக்கை வாயைத் திறந்து புலம்பி உட்கார்ந்துள்ளாள்; உதவுவான் கதிரவன் இப்படி முதுமை எல்லார்க்கும் உண்டு). எனில் கதிரவ னிடமதைக் காணவொண் ணாது. கதிரவன் வாழ்வில் கருக்கல் என்றும் காலை என்றும் கடும்பகல் என்றும் மாலை என்றும் மாற்றம்உண்டு); இம் மாற்றமல் லாற்கதிர் மகனிடம் முதுமையை எதிர்பார்த்தாலோ ஏமாற்றம் உண்டு!