பக்கம்:மூன்றும் ஆறும்.pdf/108

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மீரா & 107 இளவே னில்கதிர் கொலுவீற் றிருக்கும் இனிய பருவம்; எனினும் மற்ற பருவங்களையும் படைப்பவன் அவன்தான்! கோடை என்னும் கொடைதரு வான்: அக் கோடை தருவதால் கொல்லும் தேர்வுக் கொடுமுறை நீங்கி விடுமுறை வாங்கிப், பள்ளிசைப் பார்கள் பள்ளிச் சிறார்கள்! கதிரவன் பார்வை அதிகம் படாத குளிர் நாட்டார்கடுங் குளிரை வெறுத்துக் 'கோடையே வருக என்று கூறுவார். பல்சிறப் பமைந்த நல்வர வேற்பைச் 'சூடான வரவேற் பென்று சொல்வதால் அவர்க்குக் கதிரவன் மேல்தான் காதல் எனலாம். இந்தக் குடும்பத் தலைவனைக் கோகுலக் கண்ணன் மறைத்த தாய்ச்சொல்லி மா இருட்டடிப்புச் செயச், சிலர் நினைத்ததைச் சிந்தித்துப் பார்த்தேன்: பின்னர் "கதிரைப் பார்க் காதே, கண்கெடும் என்ற குருடர்சாத் திரத்தைக் கண்கொண்டு பார்க்காதே, என்றமா கவிஞன்” எழுத்தையும் எண்ணிப் f warm welcome

  • k பாரதி