பக்கம்:மூன்றும் ஆறும்.pdf/109

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூன்றும் ஆறும் S. 108 பார்த்தேன்; பரிதியைப் பார்க்க எழுந்தேன், பார்த்தேன் உயிர்க்குப் பசுந்தேன் வார்த்தேன்! என்னையும் மீறி என்நா இசைத்த(து) இப்படி: கதிரே வணக்கம்! கதிரே வாழ்கநீ! வள்ளுவர்க் கும் அவர் மணிநூ லுக்கும் பலபெயரிட்டுப் பாராட் டுதல்போல் பரிதி என்றும் பகலவன் என்றும் ஆதவன் என்றும் ஆதித்தன் என்றும் சுடரோன் என்றும் சூரியன் என்றும் பலபெயரிட்டுப் பாராட்ட வைத்தாய்; வைகறைப் பொழுதில். வானில் உன்துணையால் தங்கு(ம்) வண்ணம்பசுந் தங்க வண்ணம்! மாலை வெயிலோ மஞ்சள் வண்ணம்! மலைமகள் தலையில் அலைமகள் மார்பில் சிந்தும் வண்ணச் சேர்க்கை ஆயிரம் அடடா? தூரிகை தொடாது.நீ வரைந்த வெற்றிச் சித்திரம் விசித்திரம் விசித்திரம்| மறவேன் நீஓர் 'மணியான ஒவியன்! வெயிலின் அருமை நிழலில்என் பாய்நீ? நிழலைத் தரும்ஒரு தருவளர்வதற்கு நீர்தரு வாய்நீ ஒளிதரு வாய்நீ ஆமாம், நானிலம் எங்குமுன் கோனிலை காண்கிறேன் கோடை வெயில்நீ கொடுக்காவிட்டால் பட்டணத்துள்ள பணக்காரர்கள்