பக்கம்:மூன்றும் ஆறும்.pdf/110

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- மீரா & 109 மலைகளை நோக்கி வருவ தெங்கே? மலைசூழ் நாட்டு மக்க ளுக்குப் பிழைக்கும் வழிகள் பெருகுவ தெங்கே? உன்வெப்பத்தை உதவா விடில், நீர் உண்டு - முகில், சூல் உடைந்து மாமழை கொட்டுவ தெங்கே? குளிர்ந்த முல்லைக் காட்டுச் செழுமையைக் காண்ப தெங்கே? மருதம் வாரித் தருவ தெங்கே? வெயில் நீ தராவிடில் விரிகடற் கரையில் உப்புடன் மீனை உலர வைத்து வெளி நாட்டாரும் விரும்ப அனுப்பும் நெய்தல் தொழில்வளம் நிலைப்ப தெங்கே? ஆயினும் பாழாய்ப் போன பாலையால் மட்டும் பாவம், உனக்குப் பழிதான்.... ஆயினும் பாட்டுக்(கு) எதுகைபோல் பரிதியுன் பொற்கை நாட்டுக்குத் தேவை நல்கும் நல்லகை! வான்உன் இருக்கை வளரும் இருட்டைத் தின்று விளையாடித் திரிவதுன் வாழ்க்கை1 வன்மை என்றும் வழங்கும் - வீரத் தன்மை யுள்ள தலைவன்நீ, மீன் எனும் மின்னிலை களையும் மெலியும் நிலாவையும் முன்னிலை கொள்ள விடாமற் படர்க்கை ஆக்கி வேடிக்கை பார்க்கும் செய்கை அற்புதச் செய்கை ஆனந்தச் செய்கை: காலையின் ஒற்றைக் கண் நீ கீழ்த்திசைக் குயவன் நற்கரம் கொஞ்சும்சக் கரம் நீ! ஒளிக்(கு) உறைவிடம் இருட்டுக்கு விடம்நீ ஆகாய நாட்டின் அக்கினிச் சுனைநீ;