பக்கம்:மூன்றும் ஆறும்.pdf/112

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

шБтт & 111 எத்தனை செம்மை! பசுமையும் கருமையும் எத்தனை கரிய பெரும்பெரும் பூதம்| நீலப் பொய்கையில் மிதந்திடும் தங்கத் தோணிகள் சுடரொளிப் பொற்கரையிட்ட கருஞ்சிக ரங்கள் - காண்டி ஆங்கு தங்கத் திமிங்கலம் தாம்பல மிதக்கும் இருட் கடல் ஆஹா! எங்கு நோக் கிடினும் ஒளித்திரள் ஒளித்திரள் வண்ணக் களஞ்சியம்' என்றேன்; பாரதி இலக்கியம் பாடி. 'ஞாயிறு போற்று ஞாயிறு போற்றுநீ! என்றேன்; அவளும் என்னுடன் சேர்ந்தாள் “ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும்" என்றோம்; நீங்களும் என்னுடன் சேருவீர்! ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதம் ஞாலம் வாழ்கவே! + இது பாரதியின் பாஞ்சாலி சபதத்தில் உள்ள ஒரு பகுதியாகும். ★ இளங்கோவடிகள்.