பக்கம்:மூன்றும் ஆறும்.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூன்றும் ஆறும் & 10 "

கிரேக்க மன்னன், சீலம் நதியில் மிகக் குறுகிய இடைவெளி உள்ள பகுதியை நள்ளிரவில் கடந்து, புருடோத்தமன் என்ற மன்னனை வென்றான் என்பது வரலாறு. இந்நிகழ்ச்சியைக் கூறும்போது -

"சிந்து நதிப் பெண்ணின் இடை
சிறுத்த இடம் பார்த்திரவில்
வந்து வென்றான்"

என்று அந்நதியைப் பெண்ணாகவும், அதன் இடைவெளி குறுகிய பாகத்தை, அப்பெண்ணின் இடையாகவும் கவிஞர்கற்பனைசெய்யும்போது, உவமை நம் உள்ளத்தைத் தொடுகின்றது. இன்னொரு கவிதையில் பகல் வேடம் போட்டுத் திரியும் போலிப் பெரியார்களைப் பற்றி எழுதும்போது -

"ஒருவன்....-....
கோலா கலவிழாக் கூட்டத்திற்கு
வருகிறான். தலைமை வகிக்கிறான்; புகழ்ந்தோர்
போட்ட பூ மாலையைப் போட்டுக் கொண்டே
பேச, வாய் திறக்கிறான். பேசவா செய்கிறான்?
'வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம்
வாடினேன்' என்ற வள்ளலார் வாசக
அருள்மழை பொழிகிறான்.... அடடா, தரணியில்
சமத்துவப்பயிரைத் தழைக்கச் செய்வோம்
என்கிறான். இடையிடை ஏசுவைப் புத்தரை
காந்தியை இழுக்கிறான்; ஒரேகை தட்டல்"

என்கிறார். இதில் கற்பனை இல்லை. என்றாலும் படப்பிடிப்பு நம் பாராட்டைப் பெறுகின்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மூன்றும்_ஆறும்.pdf/12&oldid=984087" இலிருந்து மீள்விக்கப்பட்டது