பக்கம்:மூன்றும் ஆறும்.pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மீரா & 11 கருத்தும் வடிவமும் மட்டும் கவிதையாகிவிட முடியாது. கவிஞனது ஆன்மாவின் குரல், அவன் எழுதும் கவிதையில் ஒலிக்கவேண்டும். இது கவிஞனது அனுபவத்தைப் பொறுத்து அமைகின்றது. "வேடன், அம்பினால் பறவையை அடித்து வீழ்த்தியதை வான்மீகி கண்டார். இனம் தெரியாத துக்கம் அவர் இதயத்தை நிரப்பியது. அப்போது, அவர் சுலோகமும் பிறந்தது. அதைத்தான், சோகமே சுலோகமாயிற்று' என்று வான்மீகியே கூறினார். கவிதை கற்பிக்கும் ஆன்மாவின் குரல் இதுதான். - X இக்குரலை, இக்கவிதைத் தொகுதியில் பல இடங் களில் கேட்கின்றோம். 'iாம் என்ற முதற் கவிதையில் ஒலிக்கும் - ‘சாவா? நாம் சந்திப்போம்; வாழ்க்கை நமக்கென்ன பூவா? புறப்படுவோம் புல்லியரைத் துள்செய்வோம்.' என்ற குரலைக் கேட்டால் கோழையும் குதித்தெழுவான். கூனனும் நிமிர்ந்து நிற்பான். இல்லையா? மற்ற கவிதைகள்.....? நுனிக் கரும்பே இனிக்கின்றதென்றால் அடிக்கரும்பைக் கேட்கவா வேண்டும்?. - Дѣт. இலக்குமணப்பெருமாள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மூன்றும்_ஆறும்.pdf/13&oldid=882999" இலிருந்து மீள்விக்கப்பட்டது