பக்கம்:மூன்றும் ஆறும்.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மீரா & 19

சிந்தியுங்கள் வடவரசர் சிரத்தில் சுமந்துவந்த கல்இருந்தா லேனும் கதைகூறும்; சேரன்கை வில் இருந்தாலேனும் வெற்றிச் செயல் கூறும். புறப்பாட்டை ஒவ்வொன்றாய்ப் புரட்டுங்கள்; மானத்தின் மறக்கோட்டை கொத்தளங்கள் வானுயரக் காண்பீர்கள்! ' தாய்நாட்டைக் காக்க உயிர்த் தன்மானம் தனைக்காக்கப் போய் வருவேன்' என முழங்கிப் போர்முனைக்குப் புறப்பட்ட அத்தானை அனுப்பிப், பின் அவன் - தானை பலவென்று செத்தான் எனுமிழவுச் செய்தித்தீ செவிப்பாய்ந்தும் சிந்தை நடுங்காத வீரத் திருமகளிர் எந்தையர்தம் நாட்டில்தான் எத்தனைபேர் எத்தனைபேர்!

ஆமாம் அறிவுடையீர்! அந்நாளில் மறவனுக்கே பூமாலை சூட்டிஇளம் பூவையர்கள் மணங்கொள்வார். புலிப்பல்லைப்போய்க் கொணர்ந்து போர்வீரர் தாலிசெய்து